Sunday, October 13, 2013

அதிவேக வளர்ச்சி காணும் நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!

உலகில் மிகவும் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாம் இடத்தில் இருக்கின்றது என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

பஸ்கொட பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில், பயிற்சிப் பட்டதாரிகள் 91 பேருக்கு அபிவிருத்தி அலுவலர் 111 ஆம் தரத்திற்கான நிரந்தர நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது:

'உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழில் இல்லாப் பிரச்சினை கிடையாது. கல்வி அபிவிருத்தியுடன் இணையக்கூடியதொரு அமைப்பு எங்களுக்குத் தேவையாகவுள்ளது. அதனால் தொழில் இல்லாப் பிரச்சினை இல்லாமலாகின்றது. சமூகத்தில் உள்ள மக்களின் வாழ்வியல் முறையை அபிவிருத்தி செய்தால் நாடு முன்னேற்றத்தின்பால் செல்லும்.

இலங்கையில் நூற்றுக்கு 15 வீதம் இருந்த வறிய நிலை நூற்றுக்கு 6 ஆகக் குறைந்துள்ளது. உலகில் மிகவும் வேகமாக வளர்ச்சி கண்டுவரும் நாடுகளில் இலங்கை 2 ஆவது இடத்தை எட்டிப் பிடித்துள்ளது. அபிவிருத்தியடைந்து வரும் 144 நாடுகளில் வரிசையில் இலங்கைக்கு 81 ஆவது இடம் கிடைத்துள்ளது. நாங்கள் எங்களது சேவைகளை சரிவர பொதுமக்களுக்கு வழங்குவதாயின், நாடு சகல துறைகளிலும் நாளுக்கு நாள் வளர்ச்சி காணும்'

(கேஎப்)

1 comments :

Anonymous ,  October 13, 2013 at 7:18 PM  

Very Nice, Congartulations Sri Lanka!

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com