Tuesday, October 22, 2013

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டும்

நிதி அமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க முன்மொழிய வேண்டும்.

நாட்டின் தேசிய வருமானத்தின் பங்காளிகளாக இருக்கும் தோட்ட தொழிலாளர்களின் முக்கிய பிரச்சினையான தமது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காத படியால் தினமும் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். அத்தோடு 2005ஆம் ஆண்டு மஹிந்த சிந்தனையில் கூறிய 10 பேர்ச் காணி, தனி வீடு என்பவற்றையும் உடன் வழங்க வேண்டும் என்று ஜே.வி.பி யின் தலைமைத்துவதின் கீழ் இயங்கும் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆர். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment