சகோதரனுக்காக மக்களை பலிக்கடாவாக்கும் மண்டையன் குழு சுரேஸ் பிறேமச்சந்திரன்! சித்திரன்
சர்வதேசம் வடமாகாணசபை தேர்தலை அவதானிக் கின்றது. இத் தேர்தல் எமது தீர்வுக்கான முதல் படி. எல்லா மக்களும் ஒன்று திரண்டு இந்த அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் நில அபகரிப்புக்கு எதிரா கவும் கூட்டமைப்புக்கு வாக்களித்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க செய்ய வேண்டும்.
இதை கேட்க மக்களுக்கு தேர்தல் மேடை ஞாபகம் வரும். ஆம் நிச்சயமாக அவை தேர்தல் மேடைகளில் மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரனால் கூறப்பட்டவை தான்.
அப்ப அவர் சொன்னதை கேட்டு எமது மக்கள் கூட்டமைப்பை நம்பி வாக்களித்தார்கள். இப்ப அவர் சொன்னது அவருக்கே ஞாபகம் இருக்கோ தெரியாது.
அப்ப பார்த்த சர்வதேசம் இப்ப தம்பிக்காக சண்டை பிடிக்கேக்க பார்க்கேலையா? அப்ப ஒற்றுமையாக வாக்களிக்க கேட்டிங்க. இப்ப ஒற்றுமை எங்க போட்டுது. வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 30 ஆசனங்களைப் பெற்றுள்ளது. சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி முன்னிலையில் சி.வி.விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம் செய்ய மௌனமாக இருந்து அதைப் புறக்கணித்த மண்டையன் குழுத் தலைவர் இன்று இடம்பெற்ற உறுப்பினர் பதவிப் பிரமாணத்தையும் புறக்கணித்து விட்டு இன்று கத்துறார்.
ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் எடுக்கும் போது மௌனம். இன்று மட்டும் ஏன் இந்த கூச்சல்.
நடைபெற்று முடிந்த வடமாகாணசபைத் தேர்தலில் மண்டையன் குழுத் தலைவர் சுரேஸ்சின் தம்பி சர்வேஸ்வரனும் சூழலியலாளர் ஜங்கரநேசனும் ஈபிஆர்எல்எப் சார்பாக யாழில் போட்டியிட்டனர்.
இதில் தனது தம்பி வென்றதும் தம்பிக்கு அமைச்சுப் பதவி வழங்க வேண்டும் என தமிழரசுக்கட்சியிடமும் தனது உறுப்பினர்களிடமும் கூறிவந்த சுரேஸ்சின் செயற்பாட்டால் ஜங்கரநேசன் மெல்ல மெல்ல ஈபிஆர்எல்எப் கட்சியின் கட்டமைப்புக்களில் இருந்து விலகி தமிழரசுக்கட்சியிடம் தஞ்சம் கோரத் தொடங்கினார்.
தனது தலைவரை சுட்டவர்கள் நந்திக் கடலோரத்தில் கோமணத்துடன் கிடந்ததாக பத்மாநாவா நினைவு நாளில் கூறிய மண்டையன் குழு தலைவருக்கு மக்கள் நல்ல பதில் அளித்தனர். தனது சொந்த தொகுதியில் கூட வாக்கு எடுக்க முடியாத தம்பியார் சர்வேஸ்வரன் மற்றவங்களின் வாக்கில வாலைப்பிடிச்சு வென்றிட்டார். அப்படி வந்த சர்வேஸ்வரனுக்கும் அமைச்சுப் பதவி கொடுக்க வேண்டும் என மண்டையன் குழுத்தலைவர் தமிழரசுக் கட்சியிடம் கோரி வந்தார்.
இவர் சொன்னதைக் கேட்க அவர்களும் என்ன மண்டையன் குழுவா? அவங்க அப்புக்காத்துகள் ஆச்சே. அதால இவற்ற கதை எடுபடல.
தம்பிக்கு கிடைக்காதது ஜங்கரநேசனுக்கும் கிடைக்க கூடாது என சுரேஸ் கிளம்பினார். ஜங்கரநேசனுக்கு ஏன் அமைச்சு கொடுக்க கூடாது? அவருக்கு படிப்பு இருக்கு. அதைவிட நல்ல வாக்கு தானே கிடைத்தது. என்ற கருத்து மெல்ல மெல்ல கிளம்ப வெளிக்கிட மண்டையன் குழு தலைவருக்கு புது ஜடியா தோன்றியது.
முல்லைத்தீவு மக்களை குழப்பி அவர்களின் பிரதேசத்திற்கு அமைச்சு வேண்டும் என மக்களை மனுக் கொடுக்கச் செய்தார். எங்கட மக்கள் அதற்கும் பலிகடாவானார்கள். இதுக்குள்ள வைத்தியர் சிவமோகனுக்கு முல்லைத்தீவு அமைச்சர் பதவி தாறாதாக மண்டையன் குழு றேட் பேசிட்டாங்க. ஓம் என்ற வைத்தியரும் மண்டையன் குழுவோட சேர்ந்து மக்களை திரட்டி ஆர்பாட்டம் செய்ய வைத்தார்.
அதன் பிறகு வாகனம் ஒழுங்குபடுத்தி கொடுத்து தமிழரசுக் கட்சி தலைமைகளை முல்லைத்தீவு மக்கள் சந்திக்கச் செய்தது மண்டையன் குழு.
தமிழரசுக் கட்சி பனங்காட்டு நரியாச்சே. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல் ஜங்கரநேசனுக்கு அமைச்சுப் பதவியை அறிவித்தது. திகைத்து போன மண்டையன்குழு ஜங்கரநேசன் எங்கடகட்சி இல்ல எங்கட கட்சிக்கு அமைச்சுப் பதவி தாங்க எனக் கூறியது. ஜங்கரநேசன் ஈபிஆர்எல்எப் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால் அவர் அந்த கட்சி தான் என தமிழரசுக் கட்சி கூறிவிட்டது.
இந்த நிலையில் தான் ஈபிஆர்எல்எப் ஏனைய பங்காளிகட்சிகளான புளொட்டையும் ரெலோவையும் அணுகி பதவிப்பிரமாணத்தை புறக்கணிக்க தீர்மானித்தது. சுத்துமாத்து செல்வம் ஓம் ஓம் என்று சொல்லி விட்டு பதவிப்பிரமானத்திற்கு போய்விட்டார்.
தனக்கு அமைச்சு இல்ல என்று நின்ற சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ சார்பாளர்களையும் புயொட் சித்தார்த்தனையும் ஒன்று சேர்த்த சுரேஸ் 9 பேரை பதவிப்பிரமாணம் செய்ய செல்லவிடாது தடுத்துள்ளார்.
இதில இவரை கட்சியால கேட்டு வென்றவர்கள் 5பேர். தம்பிக்காக எங்க மட்டும் இந்த பிரச்சனை வந்துட்டுபாருங்க.
இவர்களைஎ நம்பி வாக்களித்த மக்களை பலிகடாவாக்கி தம்பிக்கு ஒரு அமைச்சுக் கேட்ட சுரேஸ் இப்ப முல்லைக்கு அமைச்சுக் கேட்கிறார். முல்லைக்கு அமைச்சுப் போன சுரேஸ்சுக்கு காசு தாறதாக சிவமோகன் சொல்லிட்டார். காசு வரும் என்றதால இங்கேயும் மண்டயன் குழுவின் பழைய உறுப்பினர் ரவிகரனுக்கு ஆப்பு தான்.
சரி, வடமாகணசபையை சர்வதேசம் பார்கிறது. வாக்களியுங்க என்றவர் .இன்றைக்கு தான் அதைக்குழப்புவது சரியா? சர்வதேசம் இன்றைக்கு என்ன நித்திரையா? தம்பிகாகாக 9 உறுப்பினர்களையும் அவர்கள் பின்னுள்ள மக்களையும் பலிகடாவாக்கும் மண்டையன் குழுவா தேசியத்தை பெற்றுத்தரப் போகிறது? அல்லது தீர்வைப் பெற்றுத் தரப் போகிறது. மண்டையன் குழுவுக்கு இனியும் பலிக்கடாவாக எமது மக்கள் என்ன மண்டையன்களா?
0 comments :
Post a Comment