பலவந்தமாக காணிகள் எவையும் சுவீகரிக்கப்படவில்லை-இராணுவப் பேச்சாளர்
பலவந்தமாக காணிகள் சுவீகரிக்கப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என்பதுடன் சட்ட ரீதியான அடிப்படையில் பாதுகாப்பு தேவைகளுக்காகவே வடக்கில் உள்ள சில காணிகள் சுவீகரிக்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த இராணுவ முகாம்கள் புனரமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருவததாகக் குறிப்பிட்ட அவர் இதே போன்றே தென்பகுதியில் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது பொதுமக்களிடமிருந்து காணிகள் சுவீகரிக்கப்பட்டதாகவும் அதேபோன்று வடக்கில் பாதுகாப்பு நோக்கங்களுக்காகவே காணிகள் சுவீகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் இராணுவ முகாம்களை பாதுகாப்பு காரணிகளுக்காக புகைப்படம் எடுக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment