முகவர் நிலையத்தில் இலங்கையன் ஒருவன் என்னை சிகரட்டால் சுட்டுப் பொசுக்கினான் – வீட்டுப் பணிப்பெண்.
கடந்த 15 ஆம் திகதி லெபனானுக்கு வீட்டுவேலையாளாகச் சென்ற அநுராதபுரம் கருவலகஸ்வேவவைச் சேர்ந்த சிராணி ஜயசிங்க என்பவரை முகவர் நிலையத்தின் உரிமையாளர் தலை மயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டுபோய் லிஃப்டில் தன்னை தள்ளி தலையில் அடித்து சித்திரவதை செய்ததாக சிராணி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இவர் அனுராதபுரம் பஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு உப முகவர் நிலையம் ஊடாக லெபனானுக்கு அனுப்பப்பட்ட இவரை லெபனானில் உள்ள முகவர் ஒரு வீட்டுக்கு வேலைக்கு அனுப்பிவைத்ததாகவும் குறித்த வீட்டுக்கு வேலைக்கு சென்ற நாளில் இருந்து தனக்கு தலைவலி ஏற்பட்டதும் வீட்டுக்காறர் சில பரசட்டமோல் வில்லைகளைக் கொடுத்ததாகவும் எனினும் குணப்படாததால் 5 நாட்களுக்குப் பின்னர் தன்னை மீண்டும் முகவரிடமே மீள அளித்ததாக குறிப்பிடுள்ளார்.
மேலும் முகவர் நிலையத்தில் தன்னுடன் பேசிய முகவர் நிலைய இலங்கைய ஒருவன் தான் பொய் சொல்கிறேன் எனக்கூறி சிகரட்டால் பல இடங்களில் சுட்டதுடன் முகவர் நிலையத்தின் உரிமையாளரான அராபியன் தன்னுடைய தலையில் தண்ணீரை ஊற்றி ஈர உடுப்புடன் ஒரு அறையில் 3 நாள் பூட்டி வைத்திருந்ததாக குறிப்பிட்ட அவர் 4ஆம் நாள் அந்த முகவர் நிலையத்தில் இருந்த இலங்கையன் தன்னை அடித்து உதைத்ததுவிட்டு டிக்கற்றும் போட்டு கொண்டு வந்த என்னை இழுத்துச் சென்று ஞாயிறு காலை 3 மணிக்கு வானூர்தி நிலையத்தில் விட்டுச்சென்றதாக குறிப்பிட்டார்.
இதனால் அன்றைய தினம் ஒரு நாள் முழுதும உணவு, தண்ணீர் இல்லது இலங்கை வந்த நான் வானூர்தி நிலையத்தில் எனக்கு நடந்தவற்றைக் கூறி முறைப்பாடு செய்தொடர்ந்து வானூர்தி நியைத்தில் உள்ள வெளிநாட்டுப் பணியாளர் நிலையம் என்னை நீர்கொழும்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது எனக்குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment