Saturday, October 19, 2013

பழையன கழிதலும் புதியன புகுதலும் - புதிய சட்டங்கள்!

பழங்கால சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட் டுள்ளதாக பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித் துள்ளார். பதுளை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் நடை பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளை கணனி மயப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நீதிமன்றங்களினால் மக்களுக்கு நன்மைகள் கிடைக்காத பட்சத்தில் நீதி மன்றங்களின் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விடுவார்கள் என தெரிவித்த அவர், நீதிபதிகள் மற்றும் சட்டடத்தரணிகள் ஏனையவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment