நிலக்கரி மின் உற்பத்தியின் புதிய அத்தியாயம்! சம்பூர் நிலக்கரி மின் உடன்படிக்கை கைச்சாத்து!
இலங்கையின் நிலக்கரி மின் உற்பத்தியின் புதிய அத்தியா யத்தினை ஆரம்பிக்கும் வகையில் சம்பூர் நிலக்கரி மின் நிலையத்திற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள து. இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான இராஜதந்திர உறவினை வலுப்படுத்தும் வகையில் திருகோணமலை சம்பூர் நிலக்கரி மின் உற்பத்தி நிலைய நிர்மாணபணிகளுக் கான உடன்படிக்கைகள் கைச்சாத்தும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இதில் பங்கேற்றார். செயற் திட்டத்தை அமுல்படுத்தும் உடன்படிக்கை, முதலீட்டு உடன்படிக்கை, காணி குத்தகை உடன்படிக்கை, மின்சக்தியினை கொள்வனவு செய்யும் உடன்படிக்கை, நிலக்கரி கொள்வனவு செய்யும் உடன்படிக்கை என்பன கைச்சாத்திடப்பட்டன.
சம்பூர் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் தேசிய மின்வழங்கல் தொகு திக்கு 5 ஆயிரம் மெகாவோட் கொள்ளளவு கொண்ட மின் உற்பத்தியினை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 512 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு செயற்திட்டத்தினை பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அமை ச்சர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பெசில் ராஜபக்ஷ, பவித்ரா வன்னியாரச்சி, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதை தொடர்ந்து மின் உற்பத்தி துறையின் எதிர்கால சவால்களுக்கு வெற்றிகரமான தீர்வினை வழங்க இந்த செயற்திட்டத்தின் ஊடாக முடியும் என ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.
நாட்டின் மின் தேவையினை நிவர்த்தி செய்வதற்காக நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் தேவைகள் நீண்டகாலமாக காணப்பட்டன. நாட்டில் ஒன்று அல்லது 2 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் தாபிக்கப்பட்டிருக்க வேண்டும். 1982ம் ஆண்டு முதல் இதற்கான தேவைகள் காணப்பட்ட போதிலும் இது குறித்து உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
எரிபொருள் மற்றும் உராய்வு எண்ணெய் பயன்படுத்தி மின் உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் மின் உற்பத்திக்கு கணிசமான நிதியினை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. அனல் மின் உற்பத்தி நிலையம், நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் போன்றன நாட்டின் மின் தேவைக்கு அத்தியவசியமானது. ஜனாதிபதியின் தூர நோக்கு கொண்ட செயற்பாடுகள் காரணமாக 2005ம் ஆண்டு இதற்கான அடித்தளம் இடப்பட்டது. இன்று இது வெற்றியளித்துள்ளது என தெரிவிதார்
0 comments :
Post a Comment