மாணவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட பௌத்த துறவிக்கு கடூழிய சிறை!
பாடசாலை மாணவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய அனுராதபுரம் கெபிதிகொல்லாவ பகுதியை சேர்ந்த 60 வயதான பௌத்த துறவிக்கு 10 ஆண்டுக்கு ஒத்திவைக் கப்பட்ட 02 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்பை அறிவித்தார்.
மேற்குறிப்பிட்ட பௌத்த துறவிக்கு எதிராக சட்டமாஅதிபர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தபோதே, வடமத்திய மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இது மட்டுமல்லாது இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு 75 ஆயிரம் ரூபா இழப்பீடு செலுத்துமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி வாகல்கட பகுதியில் நடைபெற்ற இக்குற்றத்தை பௌத்த துறவி ஒப்புக்கொண்டதை அடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது
0 comments :
Post a Comment