கடுகதி வீதியின் அபிவிருத்திக்கும் குறும் திரைப்படம்: விரைவில் திரையரங்குகளில் காட்சி
கட்டுநாயக்க கொழும்பு கடுகதி வீதியின் அபிவிருத்தி திட்டம் தொடர்பாக குறுந்திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் ஏற்பாட்டில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான 2 நிமிடங்கள் கொண்ட இந்த குறுந்திரைப்படத்தை தயாரித்துள்ளது. சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் ஒரு குறுந்திரைப்படம் என்ற வகையில் தயாரிக்கப்படுவதுடன் இத்திரைப்படம் திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படும்.
தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத், தகவல் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன எத்துகல, அரச அச்சகர் லலித் டி சில்வா ஆகியோரும் இந்த விடயம் தொடர்பான விசேட நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment