யாழ். கைதடியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் வடமாகாண சபைக்கான புதிய கட்டடத்திற்கான கிரகப்பிரவேசம் மற்றும் சமய அனுஷ்டானங்களுடன் இன்று காலை 7 மணிக்கு நடைபெற்றது.
வடமாகாணசபை கட்டடத்திற்கான உத்தியோகப்பூர்வ திறப்பு விழா எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெற வுள்ளதுடன் வடமாகாண சபையின் கன்னி அமர்வும் அன்றையதினமே நடைபெறவுள்ளது.
அதே வேளை இன்று நடைபெற்ற கிரகப்பிரவேச நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரன், வட மாகாண பிரதம செயலாளர், ஆளுநர் செயலாளர் உட்பட பல அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment