உபேக்ஷாவின் தந்தை பிணையில் விடுதலை!
பாராளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா ஸ்வர்ணமாலியின் தந்தையான கண்டி பாரள களனியைச் சேர்ந்த தென்னகோன் முதியன்சலாகே ஜயதிஸ்ஸ தென்னகோன் என்பவர் வௌநாட்டுச் சாராயங்களை விற்பதற்காக அநுமதிப் பத்திரம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூபா 7 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தை இலஞ்சமாக பெற்றதாகக் குறிப்பிட்டு கைது செய்யப்பட்டிருந்தார்.
இதுதொடர்பில், 5 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டின் பேரில் அவரை விடுதலை செய்வதற்கு கோட்டை நீதவான் திலின கமகே தீர்ப்பு வழங்கியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி தெகிவளையைச் சேர்ந்த சின்னத்தம்பி ஜீவரத்னம் என்பவர் கொழும்பு ஊழல் ஆய்வுப் பிரிவுக்குத் தகவல் வழங்கியதையடுத்து இவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment