மேல் மாகாண சபைக்கும் ஒரு மெகா ஸ்டாராம்.....!!
வெகுவிரைவில் நடைபெறவுள்ள மேல் மாகாண சபைத் தேர்தலுக்காக, வட மேல் மாகாண சபைக்குப் போட்டியிட்ட மெகா ஸ்டார் தயாசிரி ஜயசேக்கரவைப் போன்ற ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கவனமெடுத்துவருவதாக கூறப்படுகின்றது.
மேல் மாகாணத்தை வெற்றி பெறச் செய்வதற்கு மெகா ஸ்டார் பாத்திரமொன்றைத் தெரிவு செய்வதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இளமையான, திறமையான, புகழ்பெற்ற ஒருவரை தேடிக் கொண்டிருக்கின்றார் என ஜனாதிபதி மாளிகைச் செய்திகள் கசிந்துள்ளன.
(கேஎப்)
0 comments :
Post a Comment