இந்திய கிரிகெட் வீரர்களுக்கு கார்களை பரிசாக வழங்க முன்வந்தாராம் மும்பாய் நிழல் உலக தாதா தாவூத் - மெங்சர்க்கார்
சார்ஜாவில் 1986ம் ஆண்டு நடைபெற்ற இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தினால் இந்திய வீரர்களுக்கு விலையு யர்ந்த கார்களை பரிசாக தருவேன் என தாவூத் இப்ராஹிம் தெரிவித்ததாக இந்தியா அணியின் முன்னாள் தலைவரும், மத்தியஸ்தருமான மெங்சர்க்கார் தெரிவித்துள்ளார்.
1986 இல் சார்ஜாவில் 4 நாடுகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கட் தொடர் நடைபெற்றது. இறுதி போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்திய அணி நிஜர்ணயித்த 246 என்ற இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு சேத்தன் சர்மா வீசிய கடைசி பந்தில் மியண்டான் சிக்ஸர் அடித்து வெற்றியை பெற்று கொடுத்தார்.
இப்போட்டியின் போது மும்பாய் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் இந்திய வீரர்களை சந்தித்ததாக மெங்சர்க்கார் தற்போது தெரிவித்துள்ளார். அப்போது இந்திய அணியில் மெங்சர்க்கார் இடம்பெற்றதாகவும், ஊடகவியலாளரை சந்திப் பதற்காக அணி தலைவர் கபில் தேவ் சென்றுவிட்டதாகவும், வீரர்களின் ஓய்வு அறைக்கு தாவூத் இப்ராஹிம் வந்து தமக்கு பரிசு கொடுக்க முன் வந்தததாகவும் மெங்சாக்கார குறிப்பிட்டுள்ளார்.
இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தினால் இந்திய வீரர்கள் அனைவரக்கும் உயர் ரக டொயாட்டா கார்களை பரிசாக தருவாதாக தாவூத் இப்ராஹிம் தெரிவித்ததாக மெங்சார்க்கார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கபில்தேவ், இனந்தெரியாத நபரொருவர் வீரர்களை சந்திக்க வந்ததாகவும், ஓய்வு அறையில் வெளியாள் வீரர்களை சந்திக்க அனுமதிக்க முடியாது என தாம் தெரிவித்ததாகவும், அவ்வாறு வந்தவர் தாவூத் இப்ராஹிம் என்பதை தான் அறிந்திருக்கவில்லை எனவும் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
1 comments :
குப்பை கக்கூசு இந்தியாவில் இதுவும் நடக்கும் இதற்கு மேலையும் நடக்கும்.................
Post a Comment