வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள் தமது ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம்!!
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய உயர்தர ஆசிரியர் ஒருவர் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த 8ம் திகதி வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர். தினம் கொண்டாடப்பட்டபோது பாடசாலையில் மது போதையில் இருந்த சில மாணவர்கள் தகராறு விளைவித்தமையால் ஆசிரியர் அம்மாணவர்களை தண்டித்த போது, ஒரு மாணவன் தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இதனால், மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று வவுனியா நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் தமது ஆசிரியரை வழக்கில் இருந்து விடுதலை செய்து கற்றல் செயற்பாடுகளுக்னு உதவ வேண்டும் எனவும், பாடசாலையில் போதைவஸ்து பாவனையை ஒழிக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த உடனடியாக பாடசாலைக்கு வந்ருகைதந்த வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அன்ரன் சோமாராஜா, பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் மற்றும் பழைய மாணவர்சங்க உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்களுடனும் மாணவர்களுடனும் கலந்துரையாடி மாணவர்களின் கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்துவதாக வழங்கிய உறுதி மொழியையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
0 comments :
Post a Comment