திஸ்ஸவின் இராஜினாமாக் கடிதத்தை ஏற்றார் ரணில்!
குண்டசாலை ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விலகிக் கொள்வது பற்றிக் சமர்ப்பித்துள்ள இராஜினாமாக் கடிதத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாத்திலக்க இதுபற்றிக் குறிப்பிடும்போது, தற்போது வெற்றிடமாகியுள்ள இடத்திற்கு வெகுவிரைவில் அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமைப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தாலும், திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராகவும், பொதுச் செயலாளராகவும் தொடர்ந்தும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருப்பார் என்றும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment