அரங்கிற்கு விடைகொடுக்கும் சச்சினும் டில்ஷானும்
200வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பின்னர் அவர் தனது ஒய்வை அறிவிக்கவுள்ளதாக சர்வ தேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட ஒவர்கள் கொண்ட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அவர் ஏற்கனவே ஒய்வு பெற்றிருந்தமை குறிப் பிடத்தக்கது.
நவம்பர் மாதம் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான போட்டியே அவரின் இறுதிப் போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புதுமுக விரர்களுக்கு வாய்பளிப்பதற்காக டெஸ்ட் கிரிகெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற தீர்மானித்ததாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திலகரட்ன டில்ஷான் தெரிவிக்கின்றார். இலங்கை கிரிகெட் நிறுவன தலைமையகத்தில் நடைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் திலகரட்ன டில்ஷான் தனவு ஓய்வை இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலிருந்து தாம் ஓய்வுபெறப்போவதாக திலகரத்ன டில்சான் நேற்று குறிப்பிட்டிருந்தார். இலங்கை கிரிக்கெட் பல்வேறு வெற்றிகளுக்கு பங்களிப்பு நல்கியிருந்ததுடன் அணித் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.
0 comments :
Post a Comment