முன்னாள் பெண் புலி உறுப்பினர் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மன்னார் விடத்தல்தீவைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என மன்னார் பொலிஸார் கூறுகின்றனர்.
வீடொன்றிலிருந்து தங்கம் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்ட காரணத்திற்காக இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிலிருந்து குறித்த பெண் பணத்தை களவாடி வங்கியில் வைப்புச் செய்துள்ளார். உறவினர்கள் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த பெண் போராளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பெண் போராளி கடந்த 14 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 comments :
முள்ள்ளிவாய்க்காலில் இருந்து எங்கும் ஒளிப்பு மறைவு இன்றி சுதந்திரமாக தமிழீழ போராளிகளின் சுய உருவங்கள் வெளிவந்த வண்ணமுள்ளது..
உண்மைகைகள் உறங்குவதில்லை.
முற்பது வருடங்களாக ஏமாந்த தமிழ் மக்களை நினைக்க பரிதாபமாக உள்ளது.
Post a Comment