Tuesday, October 22, 2013

கொலை செய்தாள் பத்தினி

மதுபோதை தலைக்கேறி கணவன் செய்த கொடுமையை தாங்க முடியாத நிலையில் அவரை மனைவி அடித்துக் கொன்றுள்ளார். ஞாயிறு இரவு நிவித்திகல வத்துப்பிட் டிவல எனுமிடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தனது கண வனை அடித்து கொன்றவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

38 வயதான கெ.மஹிந்த அபேரத்ன என்றவரை அடித்துக் கொன்ற சந்தேகநபரான குறித்த மனைவியை இன்று அதிகாலை பொலிசார் கைது செய்தனர். கொல்லப்பட்ட தினத்தில் சந்தேகநபரின் கணவன் அவரை தொடர்ந்து அடித்து துன்புறுத்தினார் என்றும் பிள்ளைகள் முன்னிலையில் அவரது கொடுமையை தாங்க முடியாத நிலைமையில் வீட்டின் பின் புறத்திலிருந்த இரும்புக் கோலை எடுத்துவந்து தன் கணவனை அடித்துக் கொன்றதாக இந்தப் பெண் ஒப்புக் கொண்டுள்ளார்.

சடலம் தொடர்பிலான நீதவான் விசாரணை முடிந்துள்ள நிலையில் சந்தேக நபரை நிவித்திகல நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment