போக்குவரத்து அமைச்சர் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராகவும் வழக்கு!
தனியார் பஸ் தொழிலை அழித்த தனியார் போக்குவரத்து அமைச்சர் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக கொழும்பில் இன்று (13.10.2013) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
மேலும் தனியார் பஸ் தொழிலை நிர்வகிக்க மற்றும் பொது நேர அட்டவணையை சரியாக தயாரிக்க தனியார் போக்குவரத்து அமைச்சால் முடியவில்லை எனக்குறிப்பிட்டதுடன் கடந்த ஜூலை மாதம் தொடக்கம் பஸ் கட்டண உயர்வு கோரி வருவதாகவும் இது வளங்கப்படாமையால் அன்று தொடக்கம் இன்றுவரை மாதாந்தம் 25 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இதுடன் சேர்த்து தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்கு இதுவரை 3000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் தாம் நவம்பர் மாதம் 1ம் திகதி தொடக்கம் பஸ் கட்டணங்கள் 7வீதமாக அதிகரிக்கும் என்ற அறிவிப்பை ஏற்றுக் கொண்டாலும் தாம் 12வீத அதிகரிப்பையே கோரியதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தரிவித்தார்.
0 comments :
Post a Comment