பெரகரா யானைக்கு இருவர் பலி
புதன் கிழமை இரவு கம்பளைக்கு அருகில் உள்ள மாவலை உலப்பனையில் ஒரு பெரகரா ஊர்வலத்தில் சென்று கொண்டிருந்த யானையும் குட்டியும் குழம்பியதால் அவற்றில் மிதிபட்டு 55 வயது பியதாச என்ற நபரும் 31 வயது அனுசகுமாரி என்ற பெண்ணும் பலியாகினர்.
வெளிச்சத்துக்காக ஏந்திச் சென்றுகொண்டிருந்த பந்தங்கள் ஒன்றிலிருந்து விழுந்த எரியும் சிரட்டயை குட்டி மிதித்து வெகுண்டதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. யானையை கட்டுப்படுத்த பாகனுக்கு அரை மணிநேரத்துக்குமேல் ஆயிற்றாம்..
0 comments :
Post a Comment