விக்னேஸ்வரனின் மறு உருவம்! தெரிவுசெய்த மக்களை தெருவில் விட மேற்கொள்ளும் முயற்சியா? அல்லது ......(குணா)
யுத்தத்தினால் கடந்த 30 வருடங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்த மக்கள் இலங்கை தமிழர்கள் ஒன்றுபட்ட நாட்டுக்குள் கௌரவமாகவும் சகல இனங் களுடனும் சமாதானமாக வாழ்வதையே விருப்புகின்ற னர் என்பதை நிரூபிப்பதற்காகவே விக்கினேஸ்வரனை முதல்வராக தெரிவு செய்தார்கள்.
இலங்கையில் 1970 ம் ஆண்டு காலத்தில் ஆரம்பமாகிய பயங்கரவாத நடவடிக்கைகள் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு நீண்டு கொண்டிருந்தன. இன்றைய ஜனாதிபதி மகிந்த ஆட்சியேற்பதற்கு முன்னர் பதவியிலிருந்த நான்கு ஜனாதிபதிகளும், அரசாங்கங்களும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், அவை எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. அத்து டன் பல்லாண்டு காலமாக அரசாங்கங்கள் இராணுவ நடவடிக்கைகள், சமாதானப் பேச்சுவார்த்தைகள் மட்டுமின்றி சர்வதேச மத்தியஸ்தத்தின் மூலம் தீர்வு காண பல சந்தர்ப்பங்களில் எல்.ரி.ரி.ஈ. இயக்கத்தின் பிடிவாதம், தன்னுடைய வன்முறைகளை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லாத கொள்கை, என்பவற்றால் சமாதான முயற்சிகள் படுதோல்வியடைந்ததுடன் தமிழ் மக்கள் பல்வேறு இழப்புக்களையும் சந்திக்கவேண்டி ஏற்பட்டது.
அத்துடன் யுத்தம் நிலவிய காலத்தில் எல்.ரி.ரி.ஈ.யின் கட்டுப்பாட்டிலிருந்த மக்கள் நடைப்பிணங்களைப் போன்று வாழ்ந்தனர். எல்.ரி.ரி.ஈ. தனது சர்வாதிகாரத்தின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் உள்ள மக்களை அடிமைகளைப் போல் நடத்தினர். தனக்கு எதிரான எதிர்ப்புகளை ஆயுதத்தால் அடக்கினர். வேறு ஆயுத குழுக்களின் தலைவர்களை படுகொலை செய்ததுடன், மிதவாத ஜனநாயக தலைவர்களையும், தமிழ் மக்கள் மீது அதிக செல்வாக்கை பெற்றுள்ள கல்விமான் களையும் படுகொலை செய்து மக்களை அச்சுறுத்திய எல்.ரி.ரி.ஈ., தன்னுடைய மக்களுக்காக உதித்த விடுதலைப் போராளிகள் அல்ல என்பதை உலகம் அறியும்படி செய்தனர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, யுத்தத்தினால் இலங்கை தமிழர்கள் பாதிக்கப்படு வதற்கு இந்தியா முக்கிய பங்கு வகித்தது. ஏனெனில் 1987ம் ஆண்டில் வடமராட்சி யுத்தத்தில் எல்.ரி.ரி.ஈ.யை படுதோல்வியடையச் செய்யும் கட்டத்தில் அரசாங்க படையினர் நெருங்கிக் கொண்டிருந்த போது இந்திய அரசாங்கம் தலையிட்ட காரணத்தினால் எல்.ரி.ரி.ஈ. அடையவிருந்த படுதோல்வி தவிர்க்கப்பட்டது. 1987ம் ஆண்டே எல்.ரி.ரி.ஈ.யை அழித்திருந்தால் தமிழ் மக்கள் இவ்வளவு அழிவுகளை சந்திக்கவேண்டி ஏற்பட்டிருக்காது. அன்று எல்.ரி.ரி.ஈ.யை அவ்வாறு பாதுகாத்து அழிவுகளை ஏற்படுத்த காராணமாயிருந்த இந்தியா, தற்போது 13ம் அரசியல் திருத்தம் என்ற பெயரில் சாமாதானத்தை குழப்ப முயற்சிப்பது தொட்டத்தெளிவாக புலனாகின்றது.
ஆனால், தற்போது 30 வருடம் அனுபவித்த கஷ்டம், துன்பம், இழப்புக்கள் சர்வா திகார அடக்குமுறை என்பவற்றிலிருந்து விடுதலையடைந்த மக்கள், தங்கள் உண்மையான நிலைப்பாட்டை, எண்ணக்கருத்துகளை, விருப்பங்களை, எதிர்பார்ப் புக்களை சுதந்திரமாக, மனம் திறந்து இத்தேர்தலில் சமாதானத்தை விருப்பியே விக்கினேஸ்வரனை முதலமைச்சராக தெரிவு செய்தார்களே தவிர, பிரிவினைவாதம், துவேசம், மற்றும் புலிப்பினாமிகளின் தமிழீழ மாயையை நிலைநாட்டுவதற்கு அல்ல என்பதை திரு. விக்கினேஸ்வரன் அவர்கள் மனதார விளங்க வேண்டும்.
ஆனால் முதலமைச்சராக தெரிவாகிய விக்கினேஸ்வரனின் செயற்பாடுகள், அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது "நாம் முடிந்தவரை அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு வட மாகாணத்தில் எம்மக்களு க்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்" என தெரிவிக்கும் அதே வாயால் "13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபையின் அதிகாரங்களின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவோம்" என அண்மையில் தெரிவித்தார்.
உண்மையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக் தெரிவு செய்யப்பட்டாலும் மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடனேயே மக்களுக்கு தேவையான சகல பணிகளை யும் மேற்கொள்ளமுடியும். அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு அணுவைக் கூட அவரால் அசைக்கமுடியாது. இது நீதியரசராகிய விக்கினேஸ்வர னுக்கும் நன்கு புரியும். எனவே வடமாகாணத்தின் அபிவிருத்தியையும், வட மாகாண மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு அனைத்து நடவடிக்கை களையும் எடுக்கவேண்டிய கட்டத்தில் இருக்கும். விக்கினேஸ்வரன், ஏனைய இந்திய தழிழ் அரசியல்வாதிகளைப் போல் வீர வசனங்களை பேசி தனது அரசியல் பிரவேசத்தை நிலைநிறுத்த முயற்சிக்கின்றாரா? என்ற எண்ணம் மக்கள் மத்தியல் தேன்றியுள்ளது.
அத்துடன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் த.தே.கூ. இல்லை எனவும், இணைந்து செயற்படப் போவதுமில்லை எனவும், வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் பத்திரிகையென்றுக்கு தெரிவித்திருந்தார். அவ்வா றாயின் புலிகளின் தனிநாட்டுக்கேரிக்கையை நிலைநாட்டுவதற்காகவாவும், புலிக ளின் ஏக பிரதிநிதியாகவும் செயற்படுவதற்காவுமா விக்னேஸ்வரன் முற்சிக் கின்றார்?
மேலும் "வடக்கு மக்களின் மொழி, கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறையை புரிந்துக் கொள்ளாத பொலிஸ் அதிகாரிகள், தங்களுக்கு தடையாக இருப்பதாக" வடமாகாணத்தின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடமாகாண சபையின் கன்னி அமர்வின் போது தெரிவித்துள்ள கருத்தானது, இனத்துவேசத்தை அடிப்படியாக கொண்டதா? என எண்ணத்தோன்றுகின்றது. பிரபாகரன் தனது இன மக்களை அடக்கியாள முயன்றதால் ஏற்பட்ட அனர்த்தத்தை தெரிந்திருந்தும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறான கருத்துகளை தெரிவிப்பது பிரபாகரனின் கொள் கையை விக்னேஸ்வரனும் பின்பற்ற முயற்சிக்கின்றார் என்பது புலனா கின்றது.
அத்துடன் இவர்கள் பதவிக்காக் தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும் நிலைமை உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளமையானது, மக்களின் நலனுக்காக இவர்கள் செயற்படப்போவதில்லை என்பதை தெளிவாக காட்டுகின்றது. எனினும் நிதி திட்டமிடல், சட்டம் மற்றும், காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் கட்டுமாணம், நீர்பாசனம், நுகர்வோர் அபிவிருத்தி, சமூக சேவை மற்றும் புனர்வாழ்வு, மகளிர் விவகாரம், தொழில் மற்றும் விவசாய அபிவிருத்தி, சுற்றுலா, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு விநியோக அமைச்சர் பேன்ற அமைச்சுக்ளை தம்கையில் வைத்துக்கொண்டு தாம் சுகபோக வாழ்கை அனுவவித்துக்கொண்டு மக்களை துன்பத்தில் வீழ்த்துவதற்கு முயற்சிக் காமல் மேற்குறித்த அமைச்சுக்களின் மூலம் அரசாங்கத்தின் உதவியுடன் மக்களுடன் மக்களாக நின்று வடபகுதியை முன்னேற்றுவதற்கு முயற்சிப்பார்கள் என இவர்களுக்கு வாக்களித்த மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
அத்துடன் மேடைகளில் உரையாற்றும் போது பொது வாழ்வில் இருப்பவர்கள் சுயநலமாக முடிவெடுக்கக் கூடாது எனவும் தமோ, தமது குடும்பமோ தனது எனப் பாராமல் நடந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தத முதலமைச்சர், தனது மனைவியின் ஒன்றுவிட்ட சகோதரனுக்கு செயலாளர் பதவி கொடுத்தமையானது, அவரும் பதவிக்காகவும் பெயருக்காகவும் தான் இந்த அரசியிலில் குதித்தார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.
தற்போதைய அரசு ஏனைய மாகாண சபைகளுக்கு இல்லாத புதிய விடயங்கள் பலவற்றை வட மாகாண சபையின் விடயங்களுள் உள்ளடக்கியுள்ளது. "வறிய வர்கள் மற்றும் வறிய குடும்பங்களை புனருத்தா பனம் செய்வது, உடல் உள மற்றும் வலது குறைந்த வர்களை புனருத்தாபனம் செய்வதும் அவர்களுக்கு உதவிகள் வழங்குதலும், வலது குறைந்த தொழில் செய்யவியலாதவர்களுக்கு உதவியாக நிற்றல், ஆண் பெண் சமூகவியல் தொடர்பான அமைச்சு மற்றும் சமூக சேவை புனருத்தாபனம், மீள் குடியேற்றமும் புனருத்தாபனமும் முஸ்லிம் விவகார அமைச்சு" பேன்றவையாகும். எனவே "காற்றுள்ள போதே தூற்றிக்கொள்" என்ற பழமொழிக்கு இணங்க முதலமைச்சர் செயற்படுவாரானால் பயன் பெறுவது வடமாகாணமேயாகும்.
எவ்வாறாயினும் மூன்று மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை கையிருப்பில் வைத்துக்கெள்வதையும், ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களையும் சேமித்து வைக்கும் நிலையையும், இரத்த ஆறு ஓடுவதையும் தமிழ் மக்கள் தற்போது விருப்பவில்லை என்பதற்கும் மேலாக, அவ்வாறான ஒரு நிலை இலங்கையில் ஏற்படும் என்பதை கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாது. ஏனெனில் இலங்கை அரசாங்கம் அதை ஒருபோதும் அனுமதிக்காது என்பதற்கும் மேலாக, அதற்கான சந்தர்ப்பத்தை வழங்கவும் மாட்டாது என்பதையும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் விளங்கிகொண்டு வீர வசனங்களை பேசி அப்பாவி மக்களை பிரச்சினைக்குள் வீழ்த்தாமல் தனக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பயன்படுத்தி கொள்ளவேண்டுமென்பதே தற்போ தைய தேவையாகும்.
குணா
12 comments :
Kaalaththitku aetra mukkaiyamaana aarticle.
Thanks
இலங்கை தமிழர்களை பொறுத்தளவில் ஒன்றுபட்ட இலங்கை நாட்டுக்குள், கௌரவமான உரிமைகளுடனான ஒரு மாநில சுய ஆட்சியை தான் விரும்புகின்றனர். ஆகவே தான் பிரதம நீதியரசர் விக்கினேஸ்வரனை முதல்வராக தெரிவு செய்தார்கள். மற்றும் தமிழ் கூட்டணியையும் தெரிவு செய்தார்கள்
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை கௌரவ முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டணி உறுப்பினர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து முழு மனதுடன் செயல்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையுடன் மக்கள் இருக்கிறார்கள்,
திறமை, தராதரம், அனுபவம் மற்றும் பொதுநலம் கொண்ட எமது கௌரவ முதலமைச்சர் நிச்சயமாக அரசியல் சாக்கடைக்குள் விழ மாட்டார். அவரை எவரும் விழுத்தவும் முடியாது. அவரின் பாதை என்றும் நேர்மை, நீதியானதுடன் யதார்த்தமானதும் கூட. அவருக்கு தேவை அமைதியான, ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மட்டுமே.
எதையுமே ஒரு இரவில் முடித்து விட முடியாது. எனவே நல்ல சிந்தனை, பொறுமை, நிதானமாக காய்களை நகர்த்த வேண்டும். இனி வரும் காலங்களில் இலங்கையில் சதுரங்க அரசியல் மட்டுமே வெற்றி பெரும். சாக்கடை அரசியல் அல்ல.
இனிவரும் காலங்களில், ஈழத்தமிழ் மக்களின் ஆதரவு ஆக்கபூர்வமான சதுரங்க அரசியலுக்கு மட்டுமே.
You are absolutely correct
முதலமைச்சர் ஒரு நீதியரசர் என்பது யாவரும் அறிந்தது. எனினும் அவர் தற்போது குதித்திருப்பது அரசியலுக்குள். நீதியரசர் என்பது அவரது தொழில் தகமை. நீதியரசாய் இருந்தால் தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நீதி நேர்மையுடன் தான் வாழ்வார்கள் என்று யார் சொன்னது? முதலமைச்சரும் அவ்வாறுதான். அரசியலுக்குள் குதித்த எவரும் மக்களுக்காக சேவையாற்றிய வரலாறு அரிது. எனவே அரசியலுக்குள் குதித்துள்ள முதலமைச்சர் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு தன்னிச்சையான அதிகாரம் போன்றவற்றுக்கு முதலிடம் கொடுக்காமல் மக்களின் விருப்புக்களுக்கு கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் எனது கருத்து
முதலமைச்சரின் தற்போதைய செயற்பாடுகள் பொறுமை, நிதானமாக காய்களை நகர்த்த வேண்டும் என்பதற்கு அப்பால் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு தன்னிச்சையான அதிகாரம் பேன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக எண்ணத் தேன்றுகின்றது. முதலில் பதவி மோகம் போரசை என்பவற்றிலிருந்து விடுபட வேண்டும்
ஜந்தில் வளையாதது ஜம்பதில் வளையுமா?
சுதன்
இவங்களை எல்லாம் செல்லித் திருத்தவே முடியாது! த.தே.கூவுடன் இணைந்து அரசியலுக்குள் குதித்தவர் எப்படி நீதி நேர்மையானவராக இருக்கமுடியும். நாம் இவனுகளிடம் நீதி நேர்மையை அவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது எமது தவறு! இவனுகள் மிச்சம் இருக்கும் தமிழரையும் அழித்துவிட்டுத்தன் மற்றவேலையை பார்ப்பானுகள்
Maiden speech of of the CM is something confusing.He can pull on the wires with mutual understanding,sincerity flexiblity sensible thoughts and sensible decisions may lead him to a peaceful administration.Challenging words always will bring negative results.
He is now entirely in a different field,which needs more diplomacy skill in dealing with people and with the central government in difficult situation without upsetting or offending them.He has to forget his past career.We too have to forget his past career.He must be cautious with his dippy statements, like the TNA men
Whole speech of the CM is fully confusing. Because You all know, he is the CM for whole world (Like Pirabakaran) not only for Northern Province of srilanka. And other thing is he could rule the srilankan government and srilankan government must behind him. The fucking vicneswaran going to destroy innocent tamil people. Definitely it will occur
"யுத்தத்தினால் கடந்த 30 வருடங்களாக பல்வேறு துன்பங்களை அனுபவித்த மக்கள் இலங்கை தமிழர்கள் ஒன்றுபட்ட நாட்டுக்குள் கௌரவமாகவும் சகல இனங் களுடனும் சமாதானமாக வாழ்வதையே விருப்புகின்ற னர் என்பதை நிரூபிப்பதற்காகவே விக்கினேஸ்வரனை முதல்வராக தெரிவு செய்தார்கள்."
குணா சரியாக சொல்லியுள்ளீர்கள். இவர் முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டபோது புலம்பெயர் தமிழரும், இவருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளிருந்து குழி பறிக்கும் கூட்டமும் என்ன பிரச்சாரம் செய்தார்கள்.
இவருடைய சிங்களத் தொடர்பு..
மக்கள் சிங்களவர்களை திருமணம் செய்து கொண்டமை..
மகிந்த இவர் முதலமைச்சராக வருவதையே விரும்புகின்றார்..
இவர் கொழும்பை தளமாக கொண்டவர்..
இவர் மகிந்தவுடன் இணைந்து வேலைசெய்வார்..
ஐக்கிய இலங்கையை ஏற்றுக்கொண்டுள்ளார்..
இவ்வாறு எத்தனையோ சொல்லியும் மக்கள் இவரை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்றால் உங்கள் ஆரம்ப வசனம் அதுதான் அது.
முதலில் ஒன்றை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். அதாவது,
எங்கள் கௌரவ முதலைச்சர் ஒரு அரசியல்வாதியல்ல, அவர் அதை விரும்பவும் இல்லை. அவர் ஈழத் தமிழர் மத்தியில் மிஞ்சியிருக்கும் ஒரு படித்த, பண்பான, நேர்மையான, நீதியான, பொதுநலம் கொண்ட சிறந்த மனிதர்களில் ஒருவர்.
அவரை தெரிவு செய்தது தமிழ் மக்களே தவிர அவராக அப்பதவிக்கு வரவில்லை.
அவரில் மக்கள் நல்ல நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
அதற்கு மாறாக, முற்பது வருட காலாமாக ஒரு அறிவு கெட்ட, சுயநலவாத, ஒரு கொடூர சர்வாதிகாரனின் தனி மனித முடிவுகளுக்கு வாயை மூடிக்கொண்டு தலை அசைத்த கூட்டமும் , அவனின் தூரநோக்கற்ற ஒவ்வொரு முட்டாள் செயல்பாடுகளையும் போற்றி, தலையில் தூக்கி வைத்த கூட்டமும், அவனுடன் சேர்ந்து அழிவுகளுக்கு துணை போன கூட்டமும், கொடி பிடித்த கூட்டமும், இவ்வளவு கால அழிவுகளையும், அவலங்களையும் கசப்பான அனுபவங்களையும் கண்டும்,கேட்டும், பார்த்தும்,
இன்றுவரை அதை உணர்ந்து, சிந்தித்து திருந்தவில்லை என்று தான் தெரிகிறது.
அவர்கள் எல்லாம் சாதாரண மனிதர்களா?
நல்லதை செய்யாவிடினும் தீமையை செய்யாதே.
ஆக்கபூர்வமான, யதார்த்த பூர்வமான அடுத்த கட்ட நகர்வுக்கு நல்லாசிகளை வழங்கி, ஆதரவளிக்காவிடினும், தயவு செய்து தடைகளை போட்டு, குழப்பாமல் பொறுமையாக இருப்பதே இன்றைய தேவை. அதுவே நீங்கள் தமிழ் மக்களுக்கு செய்யும் சேவை.
We should know that the people of jaffna experiencing something time to time.CVs selction is also
an experience,we cannot simply predict whether it would be a bitter experience or a nice experience.Time will give us a good explanation.
முதலில் ஒன்றை மிகத் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். அதாவது,
எங்கள் கௌரவ முதலைச்சர் ஒரு அரசியல்வாதியல்ல, அவர் அதை விரும்பவும் இல்லை. அவர் ஈழத் தமிழர் மத்தியில் மிஞ்சியிருக்கும் ஒரு படித்த, பண்பான, நேர்மையான, நீதியான, பொதுநலம் கொண்ட சிறந்த மனிதர்களில் ஒருவர்.
அவரை தெரிவு செய்தது தமிழ் மக்களே தவிர அவராக அப்பதவிக்கு வரவில்லை.
அவரில் மக்கள் நல்ல நம்பிக்கை வைத்துள்ளார்கள்.
Post a Comment