Thursday, October 31, 2013

விக்னேஷ்வரனுக்கு கொழும்பில் பேரலையாக முஸ்லிம்கள் எதிர்ப்பார்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)

வட மாகாண சபை முதலமைச்சர் விக்னேஷ்வரனுக்கு எதிராக முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் கொழும்பு லிப்டன் சுற்று வட்டாரத்தில் எதிர்ப்பார்ப்பாட்டமொன்றை நடாத்தினர்.

வடக்கு மற்றும் கிழக்கை ஒன்றிணைக்கும் முயற்சியில் இனவாத, பிரிவினைவாதமே துளிர்விடுகின்றது எனவும், அதில் முஸ்லிம்களுக்கு எந்த நன்மையும் கிடையாது என்றும் “முஸ்லிம் சகோதரத்துவம்“ அமைப்பின் அழைப்பாளரும் கொழும்பு நகராளுமன்ற உறுப்பினருமான மொகமட் முஸம்மில் அங்கு குறிப்பிட்டு்ள்ளார்.

பிரிவினைவாத புலிப் பயங்கரவாதப் பினாமிகள் வடக்கிலிருந்து முஸ்லிம்களைத் துரத்தியடித்து 2013 ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு 23 வருடங்கள் பூர்த்தியாகின்றன என்றும், வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் மீள்குடியேற்றப் படுவதற்கான வழிவகை செய்யப்பட வேண்டும் எனவும் அவர் அங்கு குறிப்பிட் டு்ள்ளார்.

(கேஎப்)

4 comments:

  1. எங்களைப் பொறுத்தளவில் 98% வீத நாடுகள் பங்கு பற்றும் மகாநாட்டுக்கு ஓரிருவர் மட்டும் பங்குபற்றாமல் ஒதுங்குவது புத்திசாலித்தனமல்ல.

    எனவே நாமும் பங்கு பற்றி, சந்தர்பங்களை பாவித்து மற்றைய நாட்டு தலைவர்களுடன் கதைத்து, எமது பிரச்சனைகளை விளக்கி எமது காரியங்களை புத்திசாலித்தனமாக சாதிப்பதே சிறந்தது.

    அதைவிட்டு ஒதுங்கி இருப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.
    Who cares us?

    மற்றைய நாடுகளுக்கு எம்மையும் தெரியாது எமது பிரச்சனையும் தெரியாது போகலாம்.

    அத்துடன், ஒருவரும் எங்களை காணவில்லை என்று தேடவும், கேட்கவும் போவதில்லை.
    நாம், என்ன அவர்களின் கூடப் பிறப்புக்களா? அல்லது அவர்களின் சம்பந்திகளா?

    நன்றாக யோசித்துப் பார்க்கவேண்டும்.!

    எங்கள் எல்லோருக்கும் குறுகிய சிந்தனையை விட்டு, தெளிவான ஒரு பரந்த சிந்தனை கட்டாய தேவையாகிறது.

    எனவே, தயவு செய்து எமது முதலமைச்சரும், இந்திய பிரதமரும் கட்டாயம் அந்த மகாநாட்டில் கலந்து கொண்டு ஒரு ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்.

    எமக்கு சாக்கடை அரசியல் இனியும் வேண்டாம். எங்களின் முடிவு சரியானது,

    நன்றி
    ஈழத்தமிழ் மக்கள் சமுதாயம்

    ReplyDelete
  2. Eastern province is an example for the unity of multi cultural peaceful societies.

    ReplyDelete
  3. North PC is not able to perform its own duty with perfection and how it can add another peaceful province and spoil the whole soup.Be sure everything might get jammed

    ReplyDelete
  4. NO CHANCE FOR MINISTRY POST.
    DON'T BE DREAMING AND CHEATING OTHERS.

    ReplyDelete