அமைச்சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்களின் சகல வெளிநாட்டுப் பயணங்களும் நவம்பர் மாதம் வரை ரத்து!
பொது நலவாய நாடுகளின் உச்சி மாநாடு மற்றும் அரசாங் கத்தின் வரவு செலவுத் திட்டப் பணிகளை முறையாக மேற்கொள்ளும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவன தலைவர்களுக்கும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளக் கூடாது என்ற பணிப்புரையை வழங்கியுள்ளார் என ஜனாதிபதியின் பேச்சாளர் கலாநிதி மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 30ம் திகதி வரை இந்த தடை நடைமுறை யில் இருப்பதுடன் இதற்கிணங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், அமைச்சுக் களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பொறுப்பதிகாரி களின் வெளிநாட்டு விஜயங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கான அறிவித்தலை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உத்தியோக பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment