Saturday, October 19, 2013

கலைப் பட்டதாரி மாணவர்கள் மிகச்சிறந்த மாணவர்கள் – உயர் கல்வி அமைச்சுச் செயலாளர்.

இலங்கையின் அரச பல்கலைக் கழகங்கள் உருவாக்கும் சில பட்டதாரிகள் வேலை பெற முடியாதவர்கள் மற்றும் விலை போகாதாவர்கள் என்றும் வேலை பெறத்தக்க பட்டதாரி களை உருக்காவதற்கு பல்கலைக் கழகங்களின் கற்பித்தல் முறையில் பாரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் உயர் கல்வி அமைச்சு நேற்று கூறியுள்ளது.

தொழற்சந்தை சிடிக்களை (CD) கேட்கும் போது பல்கலைக கழகங்கள் இன்னும் கிரமோஃபோன்களையே (gramophone) ) உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றது என்று உயர் கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறும் போது கலைப்பட்டதாரி மாணவர்கள் பயனற்றவர்கள் என்ற கருதுகோள் தவறானது. நாட்டில் பிரகாசமான மாணவர் குழுவைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் வேலையற்றவர்களாக இருப்பதற்கான காரணம் இலங்கைப் பல்கலைக் கழகங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் காலங்கடந்த கற்பித்தல் முறையாகும். இந்தக் காடிசிப் படலத்தை மாற்றுவதற்கு உயர்கல்வி அமைச்சும் பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்றார்.

கலைப்பட்டதாரி மாணவர்கள் மிகச்சிறந்த மாணவர்கள். ஏனெனில் ஆவர்கள் ஆக்கத் திறன் உள்ளவர்கள். அயர்லாந்தில் 94% கலைப் பட்டதாரிகள் தொழில் வாய்ப்பு பெறுகின்றார்கள். இலங்கையிலோ பல்கலைக் கழகங்கள்தான் அவர்களை தொழில் பெறமுடியாதவர்களாக ஆக்குகின்றன. எவ்வாறாயினும் நாங்கள் பிரச்சி னையை அடையாளம் கண்டுள்ளோம். அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகை களையும் கண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment