நாட்டில் நடைமுறையில் உள்ள எந்த சட்டத்திலும் மாற்றம் கொண்டுவர எமது அரசாங்கத்தால் முடியும்-கெஹெலிய ரம்புக்வெல
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் அவசரசட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கான ஜனநாயக கதவு மூடப்படவில்லை எனவே தேவைப்படின் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் தற்போதைய சூழலில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே அரசியலமைப்பு திருத்தங்களை செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என்று தகவல் வெளியிட்ட ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல கூறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு விடயத்தை தெளிவாக அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும் அதாவது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் அவசர சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதற்கான ஜனநாயக கதவு மூடப்படவில்லை தேவைப்படின் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இயலுமை உள்ளது ஏன் எனில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற்கு தற்போது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் செயற்பட்டுவரும் அரசாங்கமாகும்.
எனவே, 13 ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்படின் அதனை எம்மால் செய்ய முடியும் அதற்கான ஜனநாயக கதவு மூடப்படவில்லை என்பதனை தெளிவாக குறிப்பிடவேண்டும் எனக்குறிப்பிட்டார்.
அதுமட்டுமல்லாது நாட்டில் நடைமுறையில் உள்ள் எந்தவொரு சட்டத்திலும் திருத்தம் ஒன்றை கொண்டுவருவதற்கு ஜனநாயகரீதியான உரிமையும் இயலுமையும் அரசாங்கத்துக்கு உள்ளது என்பதனை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என தகவல் வெளியிட்ட ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
1 comments :
Very good and this is a solution.
Post a Comment