இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த அமெரிக்க கப்பல்!
தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல் மற்றும் அதன் கெப்டன் உள்ளிட்ட 35 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியக் கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்குச் சொந்தமான "நாயகி தேவி" என்ற ரோந்துக் கப்பலில் கடலோர காவல் படை வீரர்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 30 கடல் மைல் தொலைவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நவீன ஆயுதங்களுடன் வெளிநாட்டுக் கப்பல் இந்திய எல்லையில் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டனர்.
அனுமதியின்றி நுழைந்த அந்த கப்பலை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்து பிடித்து, தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து இரண்டாவது தளத்தில் நிறுத்தினர். இதனை தொடர்ந்து அந்த கப்பலில் கியூ பிரிவு, மத்திய, மாநில உளவுத்துறையினர், கடலோர காவல் படை, மெரைன் பொலிஸார் மற்றும் து¨டிறமுக பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர்.
"சீமென் கார்டு ஓகியா" என்ற அந்தக் கப்பல் அமெரிக்காவில் உள்ள அட்வன்போர்ட் என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும் கப்பலில் 10 மாலுமிகள், 25 வீரர்கள், 3 நவீன ரக துப்பாக்கிகள் இருப்பதும் தெரியவந்தது. மேலும், மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள சியரா லியோர் என்ற சிறிய நாட்டில் கப்பல் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் ஹெர்ன்டன் ஐ தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் "அட்வன் போர்ட்" என்ற தனியார் செக்யூரிட்டி நிறுவனத்திற்கு சொந்தமாக இதுபோன்று 3 கப்பல்கள் உள்ளன. "சீமென் கார்டு ஓகியார்", "டெக்ஸாஸ்", "வெர்ஜினியார்" என்ற இந்த 3 கப்பல்களுமே அமெரிக்க அரசிடம் பதிவு பெற்று வில்லியம் ஹக்ஸ் வொட்சன் (61) என்பவரது தலைமையின் கீழ் இயக்கப்பட்டு வருகின்றன.
இவை கடல் பயணத்தின் போது ஏற்படும் கொள்ளையர்கள் தாக்குதல், கப்பல் கடத்தல் உள்ளிட்ட ஆபத்துகளில் இருந்து தனியார் கப்பல்களை காக்கும் பணியில் தனியார் இராணுவம் பேல நடத்தப்பட்டு வருகிறது. இதில் முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர்கள், கடற்படையை சேர்ந்தவர்கள், நவீன ஆயுதங்களை அதிவேகமாக கையாளும் திறன் கொண்டவர்கள் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த 3 கப்பல்களும் மஸ்கட், சூயஸ்கால்வாய், அரிசோனா ஆகிய கடல் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். எந்த கப்பல் எந்த பகுதிக்கு செல்ல வேண்டும் என தலைமையகத்தில் இருந்து உத்தரவு கிடைத்ததும் அங்கு புறப்பட்டு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்பது 'அட்வென் போர்ட்' நிறுவனத்தின் உத்தரவு, இதனடிப்படையில் கடந்த 11ம் திகதியன்று வங்களா விரிகுடாவில் பயணித்த "சீமென்கார்டு ஓகியா" வில் டீசல் அளவு வெகுவாக குறைந்ததால் அதன் கப்டன் தலைமையகத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
0 comments :
Post a Comment