அமெரிக்காவையே தாக்கிய அல்கைதாவுக்கு இலங்கை வெறும் ஜூஜூபீ... ஜனாதிபதியால் அதனைத் தோற்கடிக்க முடியாது!
'அமெரிக்காவைத் தாக்கிய அல்கைதாவுக்கு இலங்கை ஒரு மரமுந்திரிகைக் கொட்டையே.... ஜனாதிபதியால் அதனைத் தோற்கடிக்க முடியாது... இவ்வாறான கூட்டங்களை நடாத்தி இறுதியில் நாங்கள்தான் கவலைப்பட வேண்டியேற்படும்' என மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் குறிப்பிடுகிறார்.
குருந்துகஹ ஹெதெப்ம நகரத்தில் சிங்கள ராவய மற்றும் வியாபாரச் சங்கம் ஒன்றிணைந்து நடாத்திய ஆர்ப்பாட்டத்தின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குணரத்ன வீரக்கோன் மற்றும் மதகுருமார்களுக்கு இடையே பேச்சுவார்த்தை அங்கு சூடுபிடித்துள்ளதுடன், குருந்துகஹ ஹெதெப்ம நகருக்குள் இனிப் பிரவேசிக்க வேண்டாம் எனவும் அமைச்சருக்கு சிங்கள ராவய எச்சரிக்கை விடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது.
(கேஎப்)
1 comments :
அல் ஹைதாவுக்கு இலங்கை ஜூஜூபீ... தான். ஆனால் அவர்கள் இலங்கை முஸ்லிம்கள் எனக் கூறிக்கொள்வோரை இஸ்லாமியர்கள் எனக் கண்டுகொள்வதில்லை. சவுதியில் அவர்கள் சாதாரண இலங்கை வேலையாட்கள்தான்.
இந்த நிலையில் அல் ஹைதா இலங்கை முஸ்லிம்களுக்காக இலங்கையை தாக்கும் என்றெல்லாம் யாராவது கனவு காணுவார்களாயின், சர்வதேசம் என்னை காப்பாற்றும் என்று பிரபாகரன் முள்ளிவாய்காலில் மண்ணியிட்ட கதிதான் நேரும்
Post a Comment