நாட்டை நிலை குலைக்க பொதுபல சேனையுடன் வெளிச் சக்திகளுக்கும் ஆர்வம் – அமைச்சர் ஹக்கிம்
ஹலால் பிரச்சினையைப் பயன்படுத்தி இஸ்லாத்துக்கு எதிரான தவறான கருத்தை உருவாக்க வெளிச் சக்திகள் முயற்சிப்பதாகவும், இந்த சக்திகள் தற்போது நாட்டை வலுவற்ற நிலைக்குத் தள்ளிவிட எத்தனிப் பதாகவும், நீதியமைச்சர் ரவூக் ஹக்கிம் கூறுகிறார்.
ஹலாலைப் பற்றி தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது. அது பற்றிக் கலந்துரையாடல் செய்ய வேண்டும். அதை விடுத்து இச்சக்திகள் பிரச்சினைகளை உரு வாக்க முயல்கின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடு பொதுநலவாய மாநாட்டுக்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில், பொதுபல சேனை (BBS) கொழும்பில் இருந்து ஹலாலுக்கு எதிராக வாகன ஊர்வலம் நடத்திக் கொண்டிருக்கிறது. இனங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தி நாட்டை நிலைக்க விரும்பும் இத்தகைய சக்திகள் தொடர்பில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்த அமைச்சர் ஹக்கிம், சில வெளிச் சக்திகளும் இதே நோக்கத்தை அடைய முயற்சிக்கின்றன என்றார்.
1 comments :
if so why cant your government take action against balu bala sena ? are you all sleeping ?
Post a Comment