சித்தார்த்தனின் ஊதியம் வறுமைக் கோட்டில் உள்ள மக்களுக்காம்: சிவியும் மக்களுக்கு தனது ஊதியத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை
வடமாகாண சபை உறுப்பினராக இருந்து நான் பெற்றுக் கொள்ளும் ஊதியப் பணத்தினை வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் கன்னியமர்வு இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற போது, உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஊதியங்களை வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு வழங்கும் பட்சத்தில் 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேபோன்று ஏனைய உறுப்பினர்களும் மக்கள் நலன்களில் அக்கறை கொண்டவர்களாகவும் சேவை செய்யத் தான் தேர்தலில் போட்டியிட்டவர்களாகவும் இருந்தால் அவர்களும் தமது மாகாணசபை ஊதியத்தை வறுக் கோட்டின் கிழ் உள்ள மக்களுக்கு வழங்கினால் பல குடும்பங்கள் ஒரு சில நாட்கள் என்றாலும் பசியைப் போக்க முடியும் என்கின்றனர்.
இதேவேளை, வடமாகாணசபை முதலமைச்சருக்கு பணம் தேவையில்லை. ஏனெனில் அவர் நீதித்துறையின் நீதிபதியாக இருந்த காலத்தில் நிறைய பணத்தினை சம்பாதித்துவிட்டார். அவருடைய பிள்ளைகளும் அரசுடன் சேர்ந்து நன்றாக உழைக்கிறார்கள். முதலமைச்சரின் வங்கிக் கணக்கில் மாதம் ஒன்றுக்கு வருகின்ற வட்டிப் பணமே அவரது செலவுக்கு போதுமானதாம். எனவே, வடமாகாண முதலமைச்சாராக அவர் பெறும் ஊதியத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் வழங்க முன்வரவேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.
5 comments :
அப்பிடி போடு அரிவாளை.. தர்மலிங்கத்தின்ர பொடி அல்ல பொடி..
திறமை, தராதரம், அனுபவம் மற்றும் பொதுநலம் கொண்ட எமது கௌரவ முதலமைச்சர் நிச்சயமாக அரசியல் சாக்கடைக்குள் விழ மாட்டார். அவரை எவரும் விழுத்தவும் முடியாது. அவரின் பாதை என்றும் நேர்மை, நீதியானதுடன் யதார்த்தமானதும் கூட. அவருக்கு தேவை அமைதியான, ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு மட்டுமே.
எதையுமே ஒரு இரவில் முடித்து விட முடியாது. எனவே நல்ல சிந்தனை, பொறுமை, நிதானமாக காய்களை நகர்த்த வேண்டும். இனி வரும் காலங்களில் இலங்கையில் சதுரங்க அரசியல் மட்டுமே வெற்றி பெரும். சாக்கடை அரசியல் அல்ல.
சிந்திக்கும் ஈழத்தமிழ் மக்களின் ஆதரவு இனிமேல் ஆக்கபூர்வமான சதுரங்க அரசியலுக்கு மட்டுமே.
We only praise the great people,once we read their valiant deeds.We cannot simply start to praise before he starts his job.His title was entirely different one,when comparing with his present resposiblities.
மிக்க மிக்க நன்றி சித்தார்த்தன்.
Mr.Siddharthan is really the "Robin Hood" of Northern province.
Post a Comment