மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த மாணவன் கைது!
கல்முனை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்களை திருடி வந்த நபர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் வைத் கல்முனைப் பொலிசார் நேற்று மடக்கிப் பிடித்துள்ளதுடன் பிடிக்கப்பட்டவர் பாலமுனை பிரதேசத்தை சேர்ந்த மாணவன் எனவும் கல்முனைப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட மாணவன் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் படி 03 சிவப்பு நிற ஸ்பிலண்டர் ரக மோட்டார் சைக்கிள், வெள்ளை நிற ஒரு அப்பாச்சி ரக மோட்டார் சைக்கிள் ஒரு கறுப்பு நிற பெஸன் பிளஸ் மோட்டார் சைக்கிளும் ஒரு கறுப்பு நிற டிஸ்கவரி மோட்டார் சைக்கிளும் ஒரு முச்சக்கர வண்டியும் கல்முனை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த பெப்ரவரி மாதம் தொடக்கம் இம்மாதம் 16ஆம் திகதி வரை கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் 17 மோட்டார் சைக்கிள்களும் ஒரு முச்சக்கர வண்டியும் களவாடப்பட்டுள்ளது தொடர்பில் கல்முனை பொலிஸ் தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.ஏ.கப்பாரின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதனின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் உடனடியாக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 31.10.2013 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment