அரசாங்கமே ரணிலைத் துரத்த விரும்புகின்றது என மாத்தறை ஆர்ப்பாட்ட அமளிதுமளியில் துப்பாக்கிச் சூடுபட்டு கராபிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசநாந்த புஷ்பகுமாரவை நலம் விசாரிக்கச் சென்றிருந்த போது ஐதேக பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்பட்டு கைது செய்யப்பட்டு வரும் 7 ம் திகதி வரை விலக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள ஹேர்மன் குணரட்ன ஜனாதிபதியின் ஆலோசகராவார். அத்துடன் அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ள தென் மாகாண சபை உறுப்பினரும், ரணிலின் தீவிர எதிர்ப்பாளருமாகிய மைத்திரி குணரத்னவின் தந்தையுமாவார்.
இதனால்மேற்படி சம்பவத்தின் பினணியில் அரசாங்களம் இருந்துள்ளதை உறுதிப்படுத்துவதாக திஸ்ஸநாயக்கா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment