Wednesday, October 16, 2013

கிழக்கில் முஸ்லிம் தீவிரவாதிகளும் வடக்கில் புலித்தீவிர வாதிகளும் ஒன்றிணைந்து மக்களை கொன்று குவிக்க திட்டமாம்! பொதுபலசேனா

த.தே.கூ.தனது வெற்றியை வைத்துக் கொண்டு பிரிவினை வாதம் பேசுவது தவறு எனவும். வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது முயன்றால் அதற்கான பதிலடியை நாம் கொடுப்போம் என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டை சீரழிக்கும் விடயத்தை யார் செய்தாலும் அதற்கு நாம் எதிர்ப்பினையே தெரிவிப்போம். கசினோ சூதாட்ட விடயத்தில் அரசாங்கத்தை கடுமையாக எச்ரிக்கின்றோம் எனவும் அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக பொதுபலசேனா பௌத்த அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவிக்கையில், த.தே.கூ வடமாகாணத்தில் வெற்றி பெற்றுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த வெற்றியினை வைத்துகொண்டு வடக்கில் மக்களுக்காக சேவையாற்றாது அவர்களின் சுயநலத்திற்காக மக்களை கொல்ல நினைப்பது, த.தே.கூட்டமைப்பினதும் சர்வதேசத்தினதும் சதித்திட்டமாகும் எனவும், இதைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தினால் தமிழ் மக்கள் அழிவுகளை சந்திக்க வேண்டி நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது சுய விருப்பிற்காக மத்திய அரசாங்கத்தை கட்டுப்படுத்த முடியாது எனவும், இலங்கையைப் பொறுத்த மட்டில் அனைத்து மாகாணங்களுக்கும் அனைத்து இன மக்களுக்கும் ஒரே சட்டமே செயற்படுகின்றது. இதில் வட மாகாணத்திற்கு ஒரு மாதிரியும் ஏனைய மாகாணங்களுக்கு வேறு மாதிரியும் சட்டத்தை பிரயோகித்தால், அது இறுதியில் சட்டச் சிக்கலயும் பிரிவினை யினையுமே ஏற்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிடுகையில், வடக்கையும் கிழக்கையும் ஒன்றிணைத்து தனி நாட்டுக் கோரிக்கையினை நடைமுறைப்படுத்த த.தே.கூ நினைத்தால் அதற்கான தகுந்த பதிலடியினை நாம் கொடுப்போம். கிழக்கில் முஸ்லிம் தீவிரவாத சக்திகளும் வடக்கில் புலித்தீவிர வாதிகளும் ஒன்றிணைந்து வடக்கிலும் கிழக்கிலும் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களை கொன்று குவிக்கவே திட்டம் தீட்டுகின்றனர். இதை நடைமுறைப்படுத்த விடக்கூடாது.

பணத்தின் மீதுள்ள பேராசைகளினால் அப்பாவி மக்களையும் நாட்டின் கலாச்சாரத் தினையும் சீரழித்து விடக்கூடாது. இலங்கையில் பாரிய அளவிலான மோசமான நோய்கள் எவையும் இது வரையில் இனங்காணப்படவில்லை. மக்கள் சுகாதாரமாகவும் நோயின்றிய வாழ்க்கையினையுமே அனுபவித்துக் கொண்டிருக் கின்றனர். இதை கெடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து மோசமான நோய்களை இங்கு பரப்பி நாட்டினை வீணடிப்பதை அரசாங்கம் இப்போதே தடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com