Thursday, October 31, 2013

ஒபாமாவை பின்தள்ளி உலகின் அதிகாரமிக்க தலைவராக ரஷ்ய ஜனாதிபதி இடம்பிடித்தார்!

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை பின்தள்ளி உலகின் அதிகாரமிக்க தலைவராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் பிரபல போப்ஸ் சஞ்சிகை அதிகாரமிக்க தலைவர்களின் பெயரை வெளியிட்டுள்ளது. தொழிலதிபர்கள், கொடையாளர்கள், செல்வந்தர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

2013 ம் ஆண்டுக்கான பட்டியலுக்கமைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இரண்டாமிடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 3 ம் இடத்தில் சீனக் கம்யூனிச கட்சியின் தலவர் ஷீ ஜின்பிங் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். உலகின் சக்திவாயந்த பெண்மணியாக , ஜேர்மன் ச்சான்சலர் ஏஞ்சலா மேர்கல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த பட்டியலில் 5 ம் இடத்தையும் பிடித்துள்ளார்.

போப்பாண்டவர் பிரென்சிஸ் 4ம் இடத்திலும், மைக்ரோசொப்ட் நிறுவுனர் பில்கேட்ஸ் 6ம் இடத்திலும் உள்ளனர். உலக சக்திவாய்ந்த தாலைவர்களின் பட்டியலில் சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் 8 ம் இடத்தை பிடித்துள்ளார். இதேவேளை இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் 28 ஆவது இடத்திலும், முகேஸ் அம்பானி 38 ஆவது இடத்திலும், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி 66 ஆவது இடத்திலும், பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

1 comments :

Anonymous ,  October 31, 2013 at 12:56 PM  

He is efficient and suitable for this position and he has a dynamic perosnality.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com