பாம்புடன் வைத்தியசாலைக்கு வந்த நபர்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல் பிரதேச வைத்திய சாலைக்கு ஒருவர் பாம்புடன் வந்ததாக அந்த வைத்திய சாலையின் பொறுப்பு வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணிய ளவிலேயே மேற்படி நபர் பாம்புடன் வைத்தியசாலைக்கு வந்ததாகவும் அவர் கூறினார். ஈச்சிலம்பற்று கிண்ணை யடியைச் சேர்ந்த 27 வயதான எஸ்.கோபு என்பவரே வளலைப் பாம்புடன் வைத்தியசாலைக்கு வந்தார்.
முன்தினம் சனிக்கிழமை இரவு இவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, வளலைப் பாம்பொன்று அவரது கழுத்தைச் சுற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனே பாம்பை கழுத்தை விட்டுப் பிரித்தெடுக்க முயற்சித்துள்ளார். அத்தருணத்தில் பாம்பு அவரது கையை சுற்றிப்பிடித்துள்ளது.
கடும் முயற்சியின் பின்னர் கையிலிருந்து பாம்பைப் பிரித்தெடுத்து போத்தல் ஒன்றினுள் போட்டு அடைத்துக் கொண்டு வைத்தியசாலைக்கு மேற்படி நபர் வந்ததாகவும் அவர் கூறினார். குறித்த நபரை உடனடியாக திருகோணமலை வைத்தியசாலைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக வைத்தியர் பாக்கியதுரை வடிவுக்கரசி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment