பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணைத்தளங்களால் ஏற்படும் முறைகேடுகள் தொடர்பில் அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால் இந்த முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலங்கையில் இருந்தவாறு எவரேனும் சமூக இணைத்தள முறைகேடுகளில் ஈடுபடுவாராயின் அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உள்ளதாக தெரிவித்த அவர் சமூக இணைத்தளங்களில் இருந்து இனந்தெரியாதவர்கள் அனுப்பும் மின்அஞ்சல்களை பார்வையிடும்போது விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸ் தலைமையகம் இணைத்தள பாவணையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இனந்தெரியாதவர்களுக்கு இணைத்தளம் ஊடாக தகவல்களை வழங்க வேண்டாம் என்பதுடன் தற்போது சமூக இணைத்தளங்களுடன் தொடர்புடைய முறைகேடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசேட பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment