இலங்கையில் தமிழ்ப் புலிகளுக்கு வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகள் கொள்முதல் செய்வதற்கு சதித் திட்டம் தீட்டியதாக சந்தேகத்தின் பேரில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கனடிய RCMP பொலிசாரால் டொரான்டோவில் கைது செய்யப்பட்ட 37 வயது பிரதீபன் நடராஜா என்பவர் நீதி மன்றத்தில் குற்றத்தை தனது ஒப்புக் கொண்டுள்ளார். எல்.ரி.ரி.ஈ.யினருக்கு விமான ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்கு சூழ்ச்சி செய்ததாக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த எல்.ரி.ரி.ஈ உறுப்பினரான குறித்த நபரே தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பிரதீபன் நடராஜா எனும் 37 வயதுடைய கனேடிய நாட்டு சந்தேக நபர் தனது குற்றத்தை நியூயோர்க் நீதிமன்றத்தில் ஏற்றுக் கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபரை குற்றவாளியாக கருதப்பட்டு அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் இதற்கான தீர்ப்பை எதிர்வரும் 31 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்துள்ளது.
கனேடிய பிரஜாவுரிமையை கொண்ட மேலும் 3 எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் இவருடன் கைது செய்யப்பட்டனர். ஏனையவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு அமெரிக்காவில் 25 ஆண்டுகால சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏவுகணையை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்தமையே இவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.
இராணுவத்தினரின் கபீர் கே 47 ரக 500 துப்பாக்கிகளையும் கொள்வனவு செய்வதற்கு முயற்சித்துள்ளனர். இவர்களின் இந்த கலந்துரையாடலை இரகசியமாக பதிவு செய்துள்ள அமெரிக்க உளவு பிரிவு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment