Sunday, October 13, 2013

பைலின் சூறாவளியால் ஒரிசா மற்றும் ஆந்திராவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

பைலின் சூறாவளி ஒரிஸாவின் கோபாலபூரை தாக்கியதில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் ஒரிசா மற்றும் ஆந்திர மாநிலங்களிலுள்ள தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தமிழகத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.

அதைவிட இந்தியாவின் கிழக்கு பிராந்திய மாநிலங்களில் பைலின் சுறாவளி காரணமாக 5 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் மரங்கள் மற்றும் வீதிகளின் சமிஞ்சைகள் சரிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ந்தும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதனால் , எதிர்வரும் சில மணிநேரங்களுக்கு மக்கள் அவதானமாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளதுதுடன் இந்தியாவில் கடந்த 14 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com