புத்தூரில் இளம் பெண் கிணற்றிலிருந்து சடலம் மீட்பு!
புத்தூர் கிழக்கைச் சேர்ந்த அமிர்தலிங்கம் மைதிலி வயது 27 இளம் பெண் ஒருவரது சடலம் புத்தூர் கிழக்கு மத்திய சனசமூக நிலைய கட்டிடத்திற்கு முன்னதாகவுள்ள கிணற்றிலிருந்து இன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த யுவதி நேற்றிரவு வழமை போன்று வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வேளையில் தொலைபேசி அழைப்பொன்று வந்ததையடுத்து வெளியே சென்றவர் இன்று காலை வரை யுவதி பற்றிய தகவல்கள் இல்லாத நிலையில் குடும்பத்தவர்கள் அச்சுவேலி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் அந்த வழியால் சென்ற பொதுமகனொருவர் இன்று நண்பகல் குறித்த கிணற்றிற்கு அருகாக சென்றிருந்த வேளை சடலத்தை கண்டு வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் குறித்து புத்தூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment