ஒவ்வொரு மாதமும் இறுதிவாரத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு சகல மாகாணங்களின் முதலமைச்சர்களை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருவதுடன் இம்முறை நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் முதன் முறையாக ஒன்பது மாகாணங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்கவிருக்கின்றனர்.
அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு முன்னர் முதலமைச்சர்கள் பங்கேற்ற போதிலும் சில காலங்களுக்கு முன்னர் அது நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இம்மாதத்திற்கான இறுதி அமைச்சரவைக்கூட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளதுடன் இந்த அமைச்சரவைக்கூட்டத்தில் மாகாண முதலமைச்சர்கள் சகலரும் பங்கேற்பர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வடமாகாண மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது
No comments:
Post a Comment