வடமாகாண சபையின் முதலாவது விசேட செயலமர்வு இன்று நடைபெற்றது!
வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான முதலாவது செயலமர்வு இன்று(24.10.2013) காலை யாழ்.ரில்கோ ஹோட்டலில் ஆரம்பமாகி மாலைவரை நடைபெற்றது.
இந்த முதலாவது அமர்வில் வடமாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 30 உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் இந்த செயலமர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற இந்த செயலமர்வில் வடமாகாண சபையின் நடவடிக்கைகள் மற்றும் சட்டதிட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இது மட்டுமல்லாது இன்று நடைபெற்ற இந்த செயலமர்வில் வடமாகாண ஆளுநர் சந்திரசிறியும் கலந்து கொண்டிருந்தார்.
1 comments :
waste peoples
Post a Comment