ரணிலுக்குப் பின்னர் ஐதேகவிற்கு பொருத்தமான தலைவர் யாருமில்லையே...?
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரணிலின் பின்னர், தலைமைத் துவத்தைப் பொறுப்பேற்கக் கூடியமுறையில் சிறந்த ஆளுமைமிக்க ஒருவரும் இல்லை என அனர்த்த முகா மைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிடுகிறார்.
ஹம்பாந்தோட்டை ஆரபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். தலைவர்கள் இருந்தால் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். தென் மாகாண சபைத் தேர்தலும் அருகே... தலைவர்களாக மாறு வதற்கான நல்ல நேரம் காத்திருக்கின்றது. ஓவ்வொரு கதைகளையும் சோடித்து விலகிச் செல்ல வேண்டியதில்லை.
அமைச்சர் தொடங்கொட பாராளுமன்றத்திலிருந்து விலகிச் சென்று மாகாண சபையில் வேட்பாளராகவிருந்து பாரிய வெற்றியை கட்சிக்குப் பெற்றுக் கொடுத்தார். சந்திரிக்கா குமாரத்துங்க மாகாண சபையை கேட்டெடுத்து வெற்றி கண்டுதான் நாடாளும் ஜனாதிபதியாக மாறினார்.
அதனால் தலைமைத்துவம் என்பது வானத்தால் வந்து விழுவதில்லை. கட்சிக்காக அயராது உழைக்க வேண்டும். தலைவராக யாரேனும் ஒருவர் விரும்புவாரானால் தேர்தல்களில் அவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் என்றும் அவர் மேலும் தெளிவுறுத்தினார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment