இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெல்லிப்பளையில் இந்திய நிதியுதவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை கையளித்தார்!
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெல்லிப்பளையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய நிதியுதவியில் புதிகாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு வீடுகளை அதன் உரிமையாளர்களிடம் கையளித்தார்.
இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று மதியம் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் வந்ததுடன் இந்திய நிதியுதவியில் புதிகாக நிர்மாணிக்கப்படும் வீடுகள் மற்றும் இந்திய அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.
தெல்லிப்பளை தந்தை செல்வாபுரம் கிராமசேவையாளர் பிரிவில் இந்திய நிதியுதவியில் 161 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுவருவதுடன் பூர்த்தியாகும் நிலையில் உள்ள 44 வீடுகளையும் ஏனைய வீடுகளையும் பார்வையிட்டதுடன் முழுமையாக பூர்த்தி ஆகியுள்ள இரண்டு வீடுகளும் உரிமையாளரிடம் இந்திய வெளிவிவகார அமைச்சரால் கையளிக்கப்பட்டது.
ஒவ்வொரு வீடுகளும் தலா 5 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியில் நிர்மாணிக்கபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment