Wednesday, October 30, 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு தோணிகளில் காலா? சி.வி.விக்கினேஸ்வரன் பொதுநலவாய மாட்டில் கலந்து கொள்வார்?

நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கூறிவருகின்றது. உலக நாடுகள் பலவற்றின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ள முக்கியமான அந்த மாநாட்டைப் புறக்கணிப்பதற்குத் தீர்மானிக்கப் பட்டிருப்பதாக கூட்டமைப்பு அறிவித்திருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இதுபற்றி, ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்குக் கூறியிருந்தார்.

ஆனால், இந்த விடயம் பற்றி கலந்துரையாடப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், நவம்பர் 14 ஆம் திகதி (வடமாகாண சபையின் முதலமைச்சர் என்ற வகையில்) அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அங்கு இருக்க வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த 14 ஆம் திகதி அவர் கொழும்பு செல்ல வேண்டியிருப்பதன் காரணமாகவே, வடமாகாண சபையின் இரண்டாவது அமர்வை நவம்பர் 11 ஆம் திகதி நடத்துவதற்குத் திகதி குறித்துள்ளதாகத் தெரிவித்ததாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வெளியில் பலவிதமாகப் பேசப்படுவதனால், மாகாண சபை நடவடிக்கைகள் எல்லாவற்றையும் முதலமைச்சரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய சம்பந்தன் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

அதாவது, அரசியல் சம்பந்தப்பட்ட மாகாண சபை நடவடிக்கைகள் என்றாலும் சரி, வேறு எந்த நடவடிக்கை என்றாலும் சரி, அவற்றை முதலமைச்சரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள் சார்ந்த வகையில் அவர் இதனைக் கூறியிருப்பதாகக் கருதப்படுகின்றது.

அப்படியானால், அரசாங்கத்தின் அழைப்பில் வடமாகாண சபை பொதுநலவாய மாநாட்டில் சமூகமளித்திருக்க வேண்டும் என்பதையேற்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடும் எனவும் கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பும், கருத்தும் பரவலாக நிலவுகின்றது.

வடமாகாண சபையின் முதலாவது அவை கூடுவதற்கு முதல் நாளன்று யாழ்ப்பாணம் டில்கோ விருந்தகத்தில் நடைபெற்ற மாகாண சபை உறுப்பினர்களுக்கான முக்கிய கருத்தரங்கில் உரையாற்றிய போது, பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிப்பதில் அர்த்தமில்லை. அதில் கலந்து கொண்டு எம்முடைய கருத்துக்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும் என்று தான் கருதுவதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே கருத்தை அவர், டைம்ஸ் ஒவ் இண்டியா என்ற ஊடகத்திற்கு, தேர்தல் பிரசாரங்கள் எல்லாம் நடந்து முடிந்து மறுநாள் தேர்தல் நடைபெறவிருந்த வேளையில் தெரிவித்திருந்தார். முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனியொருவர் என்ற ரீதியில் கருத்து கூறுவதற்கு அவருக்கு எல்லா உரிமையும் இருக்கின்றது.

அவருக்கென தனிப்பட்ட கொள்கைகள், விருப்ப வெறுப்புக்கள் என்பன இருக்கக் கூடாது என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையோ அதிகாரமோ கிடையாது. ஆனாலும், ஒரு பொது மன்றத்தில் (டில்கோ விருந்தகத்தின் கருத்தரங்கில்) அரசியல் சார்ந்த ஒரு விடயத்தில் அவர் முதலமைச்சராக இருந்து கொண்டு தனிப்பட்ட கருத்தாகத் தெரிவிப்பது என்பது, முதலமைச்சரின் கருத்தாகவே நோக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே, எந்தவொரு கட்சி சார்ந்தும், செயற்படமாட்டேன் என்று உறுதிப்பாட்டோடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பொது வேட்பாளராகத் தேர்தலில் களமிறங்கி, முதலமைச்சராகியுள்ள விக்கினேஸ்வரன் கூட்டமைப்பின் ஏகமனதான தீர்மானங்களைப் புறந்தள்ளிச் செயற்படுவாரோ, அத்தகைய அணுகு முறையை அவர் முன்னெடுப்பாரோ என்ற சந்தேகம், பொநலவாய மாநாட்டு விடயம் தொடர்பில் துளிர்த்திருக்கின்றது.

3 comments :

Anonymous ,  October 30, 2013 at 11:03 PM  

If CV does not want to go and if there is any invitaion then it should go to the opposition and Douglus Devananda is the appropriate person to represent North and East people.

Anonymous ,  October 31, 2013 at 2:06 AM  

எமக்கு இனியும் இத்துப்போன சாக்கடை அரசியல் வேண்டாம்.!

இதுவரை கால குறுகிய சிந்தனையை விட்டு, தெளிவான ஒரு பரந்த சிந்தனை எல்லோருக்கும் கட்டாய தேவையாகிறது.

எனவே, தயவு செய்து எமது முதலமைச்சர் ஆக்கபூர்வமாக முடிவெடுத்து செயல்பட இடமளிக்க வேண்டும்.

ஆக்கபூர்வமான, யதார்த்த பூர்வமான நகர்வுக்கு ஆதரவளிக்காவிடினும், தயவு செய்து தடைகளை போட்டு, குழப்பாமல் பொறுமையாக இருப்பதே இன்றைய தேவை.



Anonymous ,  October 31, 2013 at 11:22 AM  

It is clearly indicates that we are in the primitive stages with a narrow mind.This is not a family matter just to boycott the celebrations of the families for the personal grudges.This is the matter of the entire public.The dark ages politics of the tamils almost over,The past mistakes are undone:He need to respect the country,respect the people of the northern province that is what we are looking for.If not the alternative is the opposition leader of the PC to participate.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com