உள்நாட்டு விடையத்தில் கருத்துக் கூற முடியாது- இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!
உள்நாட்டு விவகாரம் தொடர்பில் கருத்து ஏதும் கூறமுடி யாது என இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் மிச்சல் ஜே. சிசன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் மிச்சல் ஜே. சிசனுக்குமிடையில் இன்று(30.10.2013) புதன்கிழமை காலை யாழ்ப்பாணத்திலுள்ள வடக்கு முதலமைச்சரின் வாசற்தலத்தில் நடைபெற்ற சந்திப்பின் பின் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு கட்டுவன் பிரதேசத்தில் இராணுவத்தினரால் பொதுமக்களின் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் தொடுத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
மேலும் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட 5,000 குடும்பங்களுக்கான உதவிகளை அமெரிக்கா வழங்கவுள்ளதாகவும், வடக்கிலுள்ள தமிழ் மக்கள் தொடர்பில் அமெரிக்கா அக்கறை கொண்டுள்ளதாகவும் அமெரிக்கா தூதுவர் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் முதலமைச்சர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதுடன் அவரை உத்தியோகபூர்வமாக சந்தித்து பேசியுள்ளேன் என்று குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கைக்கான கொரிய தூதுவா ஜோன் மூன் சோய்யும், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை அவரது வாசஸ்தலத்தில் இன்று சந்தித்து உரையாடினார். கொரிய நாட்டில் வேலைவாய்ப்புகள் வழங்கும்போது, வட பகுதி மக்களையும் இணைத்துக்கொள்வது தொடாபாக, இங்கு கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பு தொடர்பாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
இதேநேரம், யாழ். போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த கொரிய தூதுவர், வைத்தியசாலையில் ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதியையும், பார்வையிட்டார்.
.
0 comments :
Post a Comment