தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளராவதற்கு தயாராகின்றார் மங்கள!
எதிர்வரவுள்ள தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தென் மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்கு மங்கள சமரவீர தயாராகவிருப்பதாக அக்கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிடுகிறார்.
முதலமைச்சர் வேட்பாளராக நிற்குமாறு கட்சியிலிருந்து அறிவித்தல் வந்தால் பாராளுமன்றத்திலிருந்து விலகி, மாகாண சபைக்காக போட்டியிடுவதற்கு தான் தயாராகவிருப்பதாகவும், அது சற்று அவதானம்மிக்க செயலாகவிருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் நன்மையைக் கருத்திற்கொண்டு தீர்மானத்திற்கு வரவும் தான் தயார் என்றும், அதற்கு ஒருபோதும் இணங்காமல் இருக்க மாட்டேன் எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறாயினும், அதன் பொருட்டு கட்சி உயர்மட்டத்திலிருந்தும், பிரதேச மட்டத்திலிருந்தும் இதுவரை தனக்கு அவ்வாறானதொரு கடிதம் வரவில்லை எனவும் பாராளமன்ற உறுப்பினர் குறிப்பிடுகிறார்.
மேற்கு, தெற்கு, ஊவா மாகாணங்களுக்கான தேர்தலில் தற்போது பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் முதலமைச்சருக்கான வேட்பாளர்களாக தேர்தலில் போட்டியிட்டால் கட்டாயம் அந்த மாகாண சபைகள் மூன்றும் ஐக்கிய தேசியக் கட்சியினால் வெற்றிகொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment