கலேவெலயில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு இன்று காலை தீயிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்ப்பிரிவு 119 ம் இலக்க பொலிஸ் தொலைபேசிக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸ் குழுவொன்று சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
பொலில் குழுவினர் குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்ற போது ஒரு பெண் அவளது தாய் மற்றும் இரு குழந்தைகள் பெற்றோல் ஊற்றப்பட்டு தீயிடப்பட்டுள்ளதைக் கண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நால்வரும் தற்போது தம்புள்ளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த தீவைத்தல் குற்றத்தைச் செய்தவர் குறித்த பெண்ணின் இரண்டாவது கணவர் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அவரைக் கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment