எனது மனைவிக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் நிலத்தில் தூக்கி அடிப்பேன்..!
மகரகம நகர சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் மேல் மாகாணசபை அமைச்சர் எச்சரித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிக்காவிட்டால் நகர சபையில் இருந்து வெளியேற இடமளிக்க போவதில்லை என மேல் மாகாண அமைச்சர் உபாலி கொடிகார தன்னை மிரட்டியதாக, ஐக்கிய தேசியக்கட்சியின் நகர சபை உறுப்பினர் பிரதீப் நல்லபெரும மிரிஹான பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
உபாலி கொடிகாரவின் மனைவியான மகரகம நகர சபையின் முதல்வர் காந்தி கொடிகாரவுக்கு ஆதரவு வழங்கி வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் இல்லாது போனால் தன்னை தூக்கி நிலத்தில் அடிக்க போவதாகவும் அமைச்சர் கொடிகார அச்சுறுத்தியதாக நல்லபெரும தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தலப்பத்பிட்டி விகாரை வீதியில் மரண வீட்டுக்கு சென்றிருந்த போது அங்கு வந்த அமைச்சர் உபாலி கொடிகார தன்னை இவ்வாறு அச்சுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment