ஸ்வீடன் தூதரகம் மீது கார் குண்டு தாக்குதல்
லிபியா நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள பெங்காசி நகரில் உள்ள ஸ்வீடன் நாட்டுத் தூதரக கட்டிடத்தின் கதவருகில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று இன்று காலை 11.30 மணி அளவில் திடீரென வெடித்துச் சிதறியது.
இதில் தூதரகக் கட்டிடத்தின் கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள் பறந்து விழுந்து நொறுங்கின. கட்டிடத்தின் முன்புறம் ஒரே புகைமயமாகக் காட்சியளித்தது.
எனினும் அங்கு அப்போது பணிபுரிபவர்கள் யாரும் இல்லாததால் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்தச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது மர்ம ஆசாமி ஒருவன் காரைக் கொண்டு வந்து தூதரக அலுவலகத்தின் முன்புறக் கதவருகே நிறுத்திவிட்டுச் சென்றது கண்காணிப்புக் காமிராவில் பதிவாகியிருந்தது.
இந்த சம்பவத்தினால் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது.
0 comments :
Post a Comment