இலங்கை தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் தமிழகத்தின் அழுத்தங்களுக்கு உட்பட கூடாது - இந்தியன் எக்ஸ்பிரஸ்
இலங்கையுடனான ராஜதந்திர உறவுகளின் போது இந்திய மத்திய அரசாங்கம் தமிழகத்தின் அழுத்தங்களுக்கு உட்பட கூடாது என அந்நாட்டு பத்திரிகையொன்று செய்தி வெளி யிட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இந்திய மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுத்துள்ளன.
பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள கூடாது என தமிழக அரசியல் கட்சிகள் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளன. எனினும் இவ்வாறான அழுத்தங்களுக்கு மத்திய அரசாங்கம் உட்பட கூடாது என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறான கொள்கை நாட்டின் எதிர்காலத்திற்கு பாதகமாகவே அமையுமெனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments :
Post a Comment