முள்ளிவாய்க்காலில் தனியாக பதவிப் பிரமாணம் செய்த சிவாஜிலிங்கம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று திங்கட்கிழமை முள்ளியவாய்க்கால் சேதமடைந்த பொது நோக்கு மண்டபத்திற்கு முன்னால் இன்று காலை 10.30 மணிக்கு பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
வட மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது இந்த நிகழ்வினை அக்கட்சியின் ஒன்பது உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
குறித்த உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று திங்கட்கிழமை முள்ளிவாய்க்காலில் நடைபெறும் என இந்த ஒன்பது பேரும் தெரிவித்திருந்தனர் எனினும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலையீட்டினை அடுத்து சத்தியப்பிரமாண நிகழ்வு கைவிடப்பட்டிருந்த நிலையில் சிவாஜிலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் முல்லைத்தீவுக்குச் சென்று வைத்திய கலாநிதி கே. மயிலேறும் பெருமாள் முன்னிலையில் வடமாகாணசபை உறுப்பினராக பதவிப்பிரமாணத்தை செய்து கொண்டார்.
3 comments :
உண்மையாக சொல்லப்போனால், தமிழ் மக்கள் இம்முறை தேர்தலில், நீதியரசர் விக்னேஸ்வரன் தலைமையிலுள்ள உறுப்பினர்களை தெரிவு செய்ய விரும்பியதன் காரணமாகவே இந்த வேடம்போட்ட கள்ளர்களுக்கும் வாய்ப்பு கிட்டியது.
இதுகளுக்கு படிப்பு, பண்பு, தராதரம், திறமை, அந்தஸ்து, அனுபவம் என்று ஒன்றுமில்லை,
எல்லோரும் அன்றைய தமிழீழ மாயாஜால இயக்கங்களிருந்து கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றி கொலை, கொள்ளை, களவு போன்ற கிரிமினல் வேலைகளை செய்து தங்களின் வயிற்றை வளர்த்து வந்த ஆசாமிகள்.
இப்படியான இவர்களுக்கு பதவிகள் கிடைத்ததே ஒரு பெரிய வரப்பிரசாரம். இன்றுவரை அதை உணர்ந்து திருந்துவதாக இல்லை.
அதற்கு மாறாக, மீண்டும் தங்கள் மாயாஜால விளையாட்டுகளை தொடங்கி, தப்பியிருக்கும் தமிழ் மக்களையும், மிஞ்சியிருக்கும் தமிழ் மண்ணையும் அழித்து, நாசமாக்கி..,
தங்களின் சுயநல வாழ்க்கைக்கு திட்டம் போடுறாங்கள்.
தமிழ் மக்களே,
இதுகளை தேர்ந்தெடுத்தது எங்களின் பெரும் தவறு என்பது உண்மை..
இதுகளை விட அரசாங்க கட்சியை சேர்ந்தவர்களை தெரிவு செய்திருந்தால் மிகவும் பிரயோசனமாக இருந்திருக்கும்.
மேலே தெரிவிக்கபட்ட அவ்வளவும் பன்னாடைகள் பற்றிய உண்மைகளே.
பன்னாடைகளை விட அரசாங்க கட்சியை சேர்ந்தவர்களை தெரிவு செய்திருந்தால் மிகவும் பிரயோசனமாக இருந்திருக்கும்.
நாடகங்களைத்தான் புலம்பேர்ந்தவர்கள்நம்புறாங்க.
Sun TV பார்த்துபார்த்து தொடர நாடகங்கள் பிடித்துவிட்டது.
Post a Comment